»   »  சினேகாவின் கல்யாண மண்டபம்!

சினேகாவின் கல்யாண மண்டபம்!

Subscribe to Oneindia Tamil

சொந்த ஊரான பண்ருட்டியில் கல்யாண மண்டபம் கட்டியுள்ள சினேகா, அந்தமண்டபத்தை நாளை திறக்கிறார்.

ரெண்டு படம் நடித்து நாலு காசு பர்க்க ஆரம்பித்தவுடனேயே படு புத்திசாலித்தனமாகபாதுகாப்பான முதலீடுகளுக்குத் தாவிவிடுகிறார்கள் இந்தக் காலத்து நடிகர், நடிகையர்.ஏதோ கமல், பிரகாஷ் ராஜ் மாதிரியான சிலர் தான் விதிவிலக்காக சினிமாவில்எடுத்ததை சினிமாவிலேயே போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் 3 கல்யாண மண்டபம் கட்டியுள்ளார். அது தவிர ஏராளமான நிலங்களையும்சென்னையிலும், வெளியிலும் வாங்கிப் போட்டுள்ளார். பிரஷாந்த் 12 மாடிகளைக்கொண்ட பிரமாண்டமான நகை மாளிகையை கட்டி வருகிறார்.

நடிகர்கள் இப்படிசொத்துக்களை குவித்துக் கொண்டுள்ள நிலையில் நடிகைகளும் படுஉஷாராகத் தான் இருக்கிறார்கள். நடிகை சினேகா தனது தந்தையின் பூர்வீக ஊரானபண்ருட்டியில் கல்யாண மண்டபம் ஒன்றை பிரமாண்டமாக கட்டியுள்ளார்.

இந்த மண்டபத்திற்கு சினேகாமஹால் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நாளை காலை நடைபெறுகிறது. விழுப்புரம் சரக டிஐஜி ராஜீவ்குமார் கலந்துகொண்டு மண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.

முதல் நாளான நாளை 3 ஜோடிகளுக்கு சினேகா இலவச திருமணத்தை நடத்திவைக்கிறார். நடிகை ஒருவர் இலவச திருமணம் நடத்தி வைப்பது கோலிவுட்டில்இதுதான் முதல் முறையாம். அதனால் சினேகா படு சந்தோஷமாக உள்ளார்.

எல்லாம் சரி, உங்க திருமணம் எப்போ சினேகா?

Please Wait while comments are loading...