»   »  ராமராஜனுக்கு ஜோடி ஸ்னேகா?

ராமராஜனுக்கு ஜோடி ஸ்னேகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமராஜனுக்கு சும்மா இருந்து போர் அடித்துவிட்டது போலிருக்கிறது.

இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் தவிர வேறு முக்கிய எலக்ஷன் ஏதும் இல்லை. இதனால் பிரச்சாரம்உள்ளிட்ட முக்கிய வேலைகள் ஏதும் ராமராஜனுக்கு இல்லை.

வீட்டிலேயே முடங்கிக் கிடந்து வெறுப்பாக உள்ளதால் வழக்கம்போல் தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கும்திட்டத்தில் இருக்கிறாராம். படத்தின் பெயர் சொந்த ஊரு சோழவந்தான் (இது எப்டி இருக்கு?)

ஆனால், இந்த முறை ரிஸ்க் எடுக்காமல் தனது பழைய கெட்-அப் மற்றும் பார்முலாவுக்கே போக இருக்கிறாராம்.

டவுசர், துண்டு, தாயத்து, மாடு, வக்கலு (வைக்கோல்), மஞ்ச கலரு ஜிகினா சட்டை, புலிப் பல் டாலர் செயின்,வெள்ளை செருப்பு, கண்மாய், பாட்டு என்று இருந்தவரை ராமராஜனுக்கு மார்க்கெட் நன்றாகவே இருந்தது.


மினிமம் கியாரண்டியோடு இவரது படங்கள் ஓடி தயாரிப்பாளர்களுக்கு பெட்டியை நிரப்பின. ராமராஜனுக்கும்துட்டை சம்பாதித்துத் தந்தன.

ரொம்ப மேனோடொனி ஆகிப் போச்சே என்று யோசித்த ராமராஜன், திடீரென சுமா ரங்கநாத் போன்ற மும்பைபிகர்களை கூட்டி வந்து அவர்களோடு வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் போட்டபடி மழையில் நனைந்துபிரேக் டான்ஸ் ஆட ஆரம்பித்தார். அப்போதே அவரது மார்க்கெட் லேசாக பிரேக் பிடிக்காமல் ஆடத்தொடங்கியது.

அத்தோடு சுதாரித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அடுத்ததாக விஜய்காந்தைப் பார்த்து தானும் போலீசுஆவனும் என்று ஆசைப்பட்டு போலீஸ் டிரஸ் போட்டுக் கொண்டு பெரிய ஆபிசராக நடித்தார் ராமராஜன்.


அம்மா நீங்க சாப்புட்டு தூங்குங்க.. நான் போய் திருடன புடிச்சுட்டு வந்துர்றேன் என்று வசனம் பேசியபடிமாருதி ஜிப்சியில் கொள்ளையர்களை சேஸ் செய்வது, காஷ்மீர் தீவிரவாதிகளோடு துப்பாக்கி சண்டை போடுவதுஎன்று போனபோது தான் ராமராஜனை கோலிவுட் கோலிகுண்டால் சுட்டது.

கிராமத்துக்கு கேரக்டர்களை விட்டு வெளியே வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார் ராமராஜன்.

இடையே மனைவி நளினியை விட்டுப் பிரிந்தது, இரண்டு படங்களை எடுத்து கையை சுட்டுக் கொண்டது,அதைத் தொடர்ந்து அம்மா சாப்பாடுக்கே கஷ்டம்மா என்று அறிக்கை விட்டது என்று திடீர் திடீரென வெளியேவந்து போனார் ராமராஜன்.

இந் நிலையில் போன தேர்தலின்போது களமிறங்கி அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.


இப்போது மீண்டும் ஒரு படம் எடுத்து நடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த முறை நோ ரிஸ்க். தனதுபழைய பார்முலாப்படி மீண்டும் கிராமத்து கதையையே இயக்க உள்ளாராம்.

அண்ணே பேண்டு, சொக்கா எல்லாம் வேண்டாம்னே. பேசாமா கிராமத்துக்கு கதை பக்கமே போயிருவோம்ணேஎன்று அவருக்கு வேண்டியவர்கள் எடுத்துச் சொல்லியதால், சொந்த ஊரு சோழவந்தான் என்ற பெயரில் பக்காகிராமத்து சென்டிமெண்ட் கதையை இயக்கி நடிக்கப் போகிறாராம் ராமராஜன்.

அண்ணே, உங்களுக்கு அப்போ கனகா கரெக்டா இருந்தாங்க. இப்போ பாவாடை-தாவணியில வந்து போகசரியான ஆளு ஸ்னேகா தான்னே. அவரை புக் பண்ணுங்க என்று அதே அடிப்பொடிகள் இன்னொரு ஐடியாவும்கொடுத்துள்ளார்களாம்.


இதையடுத்து ஸ்னேகாவிடம் கால்ஷீட் வாங்க முயன்று வருகிறாராம் ராமராஜன். ஸ்னேகா என்ன சொல்லப்போகிறார் என்று தெரியாததால் வேறு யாரைப் போடலாம் என்ற டிஸ்கஷனிலும் தீவிரமாக இருக்கிறாராம்ராமராஜன்.

ராமராஜனுக்கு உதைக்கும் இன்னொரு விஷயம் ஸ்னேகாவின் சம்பளம் பற்றியது. இப்போது தெலுங்குப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஸ்னேகா அங்கு ரூ. 60 லட்சம் கேட்கிறார். தமிழில் ரூ. 40 வரைகேட்கிறாராம்.

அட, நம்ம படத்துக்கு பட்ஜெட்டே அவ்ளோ தானப்பா என்று மண்டையை குடைத்து கொண்டிருக்கிறாராம்ராமராஜன்.

செண்பகமே.. செண்பகமே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil