»   »  தீயிடம் தப்பிய ஸ்னேகா

தீயிடம் தப்பிய ஸ்னேகா

Subscribe to Oneindia Tamil

பெரிய தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் புன்னகை இளவரசிஸ்னேகா.

பி.வாசு இயக்கத்தில் பாலய்யா என்ற தெலுங்குப் படம் உருவாகி வருகிறது. இதில்ஸ்னேகாவும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். ஹைதராபாத்தில் படத்தின் ஷூட்டிங்நடந்து வருகிறது.

இதனால் ஸ்னேகா ஹைதராபாத்தில் உள்ள கோல்கண்டா ஹோட்டலில் தங்கி நடித்துவருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு, ஷூட்டிங் முடித்து விட்டு ஹோட்டலுக்குத் திரும்பினார்ஸ்னேகா. 4வது தளத்தில் அவரது அறை உள்ளது. அறைக்கு வந்த அவர் குளித்துமுடித்து சற்றே ஓய்வில் மூழ்கினார். அப்போது மின்சாரம் கட் ஆகியுள்ளது.

ரொம்ப நேரமாகியும் கரண்ட் வராததால், புழுக்கமடைந்த ஸ்னேகா, அறையின்ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துள்ளார். காத்து வரும் என்று எதிர்பார்த்தவருக்குபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வெளியே வராண்டாவில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் புகைமூட்டமாக இருந்துள்ளது.

அதிர்ந்து போன ஸ்னேகா தப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரால்வெளியே வர முடியவில்லை. இதையடுத்து உதவி கேட்டு ஸ்னேகா கதறவே, இதன்பின்னர் தான் தீப் பிடித்ததே தெரிந்து ஹோட்டல் ஊழியர்கள் ஓடி வந்து ஸ்னேகாவைமீட்டு கீழே அழைத்து வந்தனராம்.

இதைத் தொடர்ந்து வேறு ஹோட்டலுக்கு அவர் இடம் மாறியுள்ளார். இதுகுறித்துஸ்னேகாவிடம் கேட்டபோது, அதிர்ஷ்டமும், கடவுளும் என் பக்கம் இருந்ததால்தான்நான் முழுசாக திரும்பியுள்ளேன் இல்லாவிட்டால் நெருப்புக்கு இரையாகிவிட்டிருப்பேன் என்று பயம் குறையாத கண்களுடன் படபடவென கூறி முடித்தார்.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil