»   »  வயசு கூடிய சினேகா!

வயசு கூடிய சினேகா!

Subscribe to Oneindia Tamil

சினேகாவுக்கு எத்தனை வயசு என்பது நமக்குத் தெரியாது, இருந்தாலும் 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒருவயது கூடி விட்டது.

சின்ன புன்னகையரசி சினேகா, வியாழக்கிழமை தனது பிறந்த நாளை படு ஜாலியாக கொண்டாடினார்.காலையிலேயே எழுந்து, குளித்து, கேக் வெட்டி சாப்பிட்டு, அம்மா, அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு,அக்காவின் கிப்ட்டைப் பெற்று கன்னத்தில் ஒரு முத்தா கொடுத்து விட்டு, அக்கா பையனை தூக்கிக் கொஞ்சியபடிதனது பிறந்த நாளை ஆரம்பித்தார் சினேகா.

முதலில் அவர் காளிகாம்பாள் கோவிலுக்குப் போய் மனமுருக பிரார்த்தனை செய்தார். சாமி கும்பிட்ட பின்னர்வீடு திரும்பிய சினேகாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவரது நெருங்கிய தோழிகள், உறவினர்கள் அங்கேகூடியிருந்தனர்.

அவர்களோடு பிற்பகல் வரை படு அரட்டையாக பொழுதைக் கழித்தார் சினேகா. அதன் பின்னர் மதியம்நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட்டுக்குச் சென்ற சினேகா, அங்குள்ள ஊனற்றகுழந்தைகளுடன் சேர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டார். அக்குழந்தைகளின் அன்றைய செலவு முழுவதையும்சினேகாவே ஏற்றுக் கொண்டாராம்.

மாலையில் மீண்டும் ஒரு ஜாலியான கொண்டாட்டமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சினேகா. தமிழ்சினிமாவிலிருந்து மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பலநடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், கொஞ்சம் நடிகைகளும் சினேகாவுக்கு தொலைபேசி மூலம்வாழ்த்துச் சொன்னார்களாம்.

நாம் வாழ்த்தலாமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil