»   »  ஃபுக்கெட் தீவில் ஸ்னேகா!

ஃபுக்கெட் தீவில் ஸ்னேகா!

Subscribe to Oneindia Tamil

பூகம்பத்தால் திணறிப் போன இந்தோனேசியாவின் ஃபுக்கெட் தீவுக்கு சமீபத்தில்போய் வந்துள்ளார் சிரிப்பழகி ஸ்னேகா.

மணம் முடித்த புது ஜோடிகளும், இளசுகளும், காதலர்களும் மட்டுமே அதிகம்நடமாடும் ஃபுக்கெட் தீவுக்கு ஸ்னேகா போனது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.ஆனால் அம்மணி தொழில்ரீதியாகத்தான் ஃபுக்கெட் போனார்.

பி.வாசு இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் பாலய்யா என்ற படத்தில் ஸ்னேகாநடிக்கிறார். மீரா ஜாஸ்மினும் படத்தில் இருக்கிறார். பெர்மண்ட் விக் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாதான் நாயகன்.

இப்படத்தின் பாடல் காட்சியைத்தான் ஃபுக்கெட் தீவில் படமாக்கினார்கள்.அதற்காகத்தான் ஸ்னேகா அங்கு போயிருந்தார். தன்னை விட படு அழகானஃபுக்கெட் தீவின் அழகில் ஸ்னேகா சொக்கிப் போய் விட்டாராம்.

படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரமெல்லாம் ஒரு கைடின் உதவியுடன் ஃபுக்கெட்ரவுண்டு அடித்தவண்ணம் இருந்திருக்கிறார். அவரை சந்திக்கும்நிருபர்களிடமெல்லாம் இந்த ஜாலி தீவு பற்றி கண்கள் பளிச்சிட சொல்லிச் சொல்லிசிலாகிக்கிறார்.

ஃபுக்கெட் தீவில் பாலகிருஷ்ணாவும், ஸ்னேகாவும் ஆடிப் பாடும் பாடல் காட்சியைபடமாக்கினார் வாசு. இந்தப் பாடல் காட்சியில் ஸ்னேகா அணிந்துள்ள அத்தனைகாஸ்ட்யூம் அவரே டிசைன் செய்ததாம். படு கலக்கலாக இந்தப் பாட்டுக்குஆடியுள்ளாராம் ஸ்னேகா.

ஸ்னேகாவின் ஃபுக்கெட் புராணம் இருக்கட்டும். அவரது பண்ருட்டி கல்யாணமண்டபம் கோலிவுட்டில் பல நடிகைகளுக்கு புதிய ஐடியாவை தோற்றுவித்துள்ளதாம்.

ஸ்னேகாவைப் போல நாமும் கல்யாண மண்டபம் கட்டினால் என்ன என்று சிலமுன்னணி நடிகைகள் எண்ணத் தொடங்கியுள்ளனராம். அதில் முன்னணியில்இருப்பவர் திரிஷா.

விரைவில் சென்னையில் மிகப் பிரமாண்டமான கல்யாண மண்டபம் ஒன்றை திரிஷாகட்டக் கூடும் என்கிறார்கள்.

சபாஷ் சரியான போட்டி..

Read more about: sneha in pucket island

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil