விஜய்க்கு அண்ணியா நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் கோட் படத்தில் அம்மா வேஷம்!
சென்னை: தளபதி விஜய்யுடன் இணைந்து வசீகரா படத்தில் நடித்த சினேகா அதன் பின்னர் பல ஆண்டுகளாக விஜய்யுடன் இணைந்து நடிக்கவே இல்லை. கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சினேகா படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வருகிறார். அப்பா விஜய்க்கு மனைவியாகவும், யங் விஜய்க்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு மனைவியாகவும் அம்மாவாகவும் சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் விஜய்க்கு அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு வந்து அதை நீங்க வேண்டாம் என சொன்னது ஏன் என்கிற கேள்வியை சினேகாவின் கணவர் பிரசன்னா கேட்டிருந்த நிலையில், அதற்கு சினேகா அழகாக பதில் அளித்துள்ளார்.
வசீகரா: 2003ம் ஆண்டு இயக்குநர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய், சினேகா, நாசர், மணிவண்ணன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த வசீகரா திரைப்படத்தின் காமெடி காட்சிகளும் பாடல்களும் இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரைட். சிம்ரன், த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகளுடன் விஜய் தொடர்ந்து நடித்த அளவுக்கு சினேகாவுடன் இணைந்து நடிக்கவே இல்லை.
அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு: விஜய்க்கு சமீபத்தில் ஒரு பெரிய படத்தில் அண்ணியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு வந்த நிலையில், அதை நீங்கள் வேண்டாம் என மறுத்துட்டீங்க அதற்கான காரணம் என்ன? நான் கூட அப்போ உங்க தேர்வை சந்தேகப்பட்டேன். ஆனால், அது பின்னர் சரியானது என்பதை புரிந்துக் கொண்டேன் என பிரசன்னா சினேகாவிடம் கேள்வி எழுப்ப அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

எனக்கு சரியா படல: விஜய்யுடன் ஜோடியாக நடித்து விட்டு அவருக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என அழைப்பு வந்த போது அந்த படத்தை தேர்வு செய்ய வேண்டும் எனக்கு தோன்றவில்லை. ஏதோ சரியா படல. அதனால், அந்த படத்தை நிராகரித்து விட்டேன். இப்போ தளபதிக்கு ஜோடியாக நடித்தது ரொம்பவே பெருமையா இருக்கு என சினேகா கூறியுள்ளார்.
வாரிசு படமா?: நடிகர் விஜய்க்கு வாரிசு படத்தில் சங்கீதா அண்ணியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தான் நடிக்க சினேகாவுக்கு அழைப்பு வந்ததா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய்க்கு ஜோடியாக மட்டுமில்லாமல் இளைய தளபதிக்கு அம்மாவாகவே நடிச்சிட்டீங்க சினேகா என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
சொர்க்கமே என்றாலும் சூப்பர்: கோட் படத்தில் மகள் ஸ்ரீனிதி இறந்த போது கூட லைலாவை காட்டாமல் பிரசாந்தை மட்டுமே வெங்கட் பிரபு காட்டியிருப்பார். ஆனால், சினேகாவுக்கு படத்தின் ஓபனிங் சீனில் இருந்து கடைசி கிளைமேக்ஸ் வரை காட்சிகள் இருக்கும். அதிலும், பாங்காக்கில் வரும் அந்த சொர்க்கமே என்றாலும் பாடல் போர்ஷனில் சினேகாவின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.
வசீகரா போட்டோ: சினேகா மற்றும் விஜய் இடையே வரும் காமெடி காட்சிகள் மற்றும் சினேகா காய்கறி வாங்கி வர சொல்லி கால் பண்ணும் இடங்கள் எல்லாம் அல்டிமேட். விஜய் மற்றும் சினேகா இருக்கும் வீட்டில் வசீகரா படத்தின் போட்டோவையும் ஃபிரேம் போட்டு வெங்கட் பிரபு வைத்திருப்பார். காந்திக்கு பதில் பூபதி என்றே பெயர் வைத்திருக்கலாம் என ரசிகர்கள் அதை பார்த்து விட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











