திருமணத்துக்குப் பிறகும் குறையாத புன்னகையுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிநேகா!
சென்னை: திருமணத்துக்குப் பிறகும் அதே இளமை - புன்னகை - உற்சாகத்துடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் சிநேகா.
பொதுவாக நடிகைகளின் புன்னகை திருமணத்துக்குப் பிறகு அத்தனை பொலிவாக இருக்காது. ஆனால் சிநேகா விதிவிலக்கு.

திருமணத்துக்குப் பிறகும்...
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்கிறார். கண்ணியமான வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். மண வாழ்க்கையிலும் அவருக்கு எந்த நெருடலும் இல்லாமல் புரிந்து வாழும் கணவர்.
இந்த ஆண்டு தன் பிறந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் கணவருடன் கொண்டாடினார் இந்த புன்னகை இளவரசி.

ஒற்றை ரூபாயில் ஆரம்பித்தது...
சிநேகாவின் முதல் படம் சுசி கணேசனின் விரும்புகிறேன் என்றாலும்... முதலில் வெளியானது ஆனந்தம். அந்த ஒற்றை ரூபாய் பாட்டு, லட்ச லட்சமாக சம்பளம் பெறும் அந்தஸ்தைத் தந்தது சிநேகாவுக்கு.

விருதுகள்
தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அவருக்கு பெருமை தரும் வகையில் அமைந்தன. குறிப்பாக பார்த்திபன் கனவு படம் சிநேகா என்ற அருமையான நடிகையை அடையாளம் காட்டியது.

கமலுடன்...
கமலுடன் ஜோடி சேர்ந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் முன்னணி நடிகை அந்தஸ்தை கொடுத்தது. ஆட்டோகிரப் படத்தில் அவர் தோன்றிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...' பாட்டு தேசிய விருதை பெற்றது.

விலைமாதுவாகவும்...
புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக தோன்றி பரபரப்பாக பேசப்பட்டார். பவானி ஐ.பி.எஸ். படத்தில் விஜயசாந்தியாக ஆக்ஷன் செய்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும் கூட, தொடர்ந்து புதிய படங்கள் அவரைத் தேடி வந்தன.

ஹரிதாஸ்
திருமணத்துக்குப் பிறகு அவர் நடித்த ஹரிதாஸ் படம் சிநேகாவுக்கு நல்ல பெயரைத் தந்தது. தற்போது பண்ணையாரும் பத்மினியும், உன் சமையல் அறையில், விடியல் போன்ற படங்கள் கைவசம் உள்ளன.

பிறந்த நாள்
இந்த ஆண்டு தன் பிறந்த நாளை கணவர் பிரசன்னா, உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார் சிநேகா.


Click it and Unblock the Notifications











