சினிமாவில் மீண்டும் பிரசன்னாவுடன் டூயட் பாடனும்: சினேகா
சென்னை: 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்த பின்னர் உண்மையிலேயே கணவன் மனைவி ஆனார்கள் பிரசன்னா-சினேகா.
முதலில் வதந்திகளை மறுத்த காதல் ஜோடி, பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொண்ட கதை எல்லாரும் அறிந்ததே. விளம்பரங்களில் நடித்து வரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வெள்ளித்திரையிலும் மீண்டும் ஜோடி சேரும் ஆசை துளிர் விட்டுள்ளதாம்.
வாய்ப்பு கிடைத்தால், கணவருடன் திரைப்படத்தில் ஜோடி சேர ஆசையாக இருக்கிறாராம் புன்னகை அரசி.

திருமணத்திற்குப் பின்...
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் சினேகாவும், பிரசன்னாவும். ஆனால், தனித்தனியாக. சினேகாவுக்கு ‘ஹரிதாஸ்'ம், பிரசன்னாவுக்கு ‘சென்னையில் ஒரு நாளும்' நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளன.

யாராவது ரெகமண்ட் பண்ணுங்களேன்...
கணவர் பிரசன்னாவுடன் விளம்பரப் படங்களில் நடித்து வரும் சினேகா, வெள்ளித் திரையிலும் ஜோடி சேரும் ஆவலில் இருக்கிறாராம். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனத் தெரிந்தவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

ஹீரோவாக வலம்...
கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரசன்னா. அப்படத்தில் அவருக்கு ஜோடி லேகா வாஷிங்டன். ஆனால், சினேகா திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் சில முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி தமிழ் உருவாக்கிய ஆசையா..?
அதிலும் தேவயானி, ராஜகுமாரன் ரியல் ஜோடி வெள்ளித்திரையில் ஜோடி போட்டதைப் பார்த்தபின்னர், இவர்களுக்கும் இந்த ஆவல் அதிகமாகியிருக்கும் போல...


Click it and Unblock the Notifications











