பெற்றோராக நானும் பிரசன்னாவும் இன்னும் தயாராகவில்லை...கர்ப்பம் குறித்து சினேகா விளக்கம்

சென்னை: தான் கர்ப்பமாக வெளியான தகவல் வதந்தி என விளக்கமளித்துள்ளார் நடிகை சினேகா.

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சினேகா சமீபத்தில் ‘உன் சமையலறையில்' படம் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

திருமணமான நாள் முதற்கொண்டு அடிக்கடி சினேகா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால், அதனை சினேகா - பிரசன்னா தம்பதியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமாக இருப்பதாக மீண்டும் ஊடகங்களில் செய்து வெளியானது. அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் சினேகா.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சினேகா கூறியிருப்பதாவது :-

உண்மையல்ல...

உண்மையல்ல...

நான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி பற்றி கேள்விப்பட்டேன். அது உண்மை அல்ல.

ஓய்வு...

ஓய்வு...

பல வருடங்கள் சினிமாவில் பிசியாக நடித்தேன். இப்போது, என் ஓய்வை வீட்டில் சந்தோஷமாக அனுபவிக்கிறேன்.

நேரம் இருக்கிறது...

நேரம் இருக்கிறது...

நானும், பிரசன்னாவும் பெற்றோராக மாற இன்னும் தயாராக வில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

புதிய படம்...

புதிய படம்...

தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும். அந்த படத்தில் நான்தான் நாயகியாக நடிக்கிறேன். நல்ல கதை.

படத் தயாரிப்பு...

படத் தயாரிப்பு...

நானும், பிரசன்னாவும் தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனாலும், படங்கள் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல.

நான்கு கதைகள்...

நான்கு கதைகள்...

நிறைய கதைகள் கேட்டு, நான்கு கதைகள் தேர்வு செய்துள்ளோம். அதில் ஒன்றை விரைவில் படமாக எடுப்போம்.

பிரசன்னா தான் ஹீரோ..?

பிரசன்னா தான் ஹீரோ..?

நாங்கள் தயாரிக்கும் படத்தில் பிரசன்னா நடிப்பாரா என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X