சிநேகா கர்ப்பம்... சந்தோஷத்தில் பிரசன்னா!

By Shankar

சென்னை: திருமணமான பின்னும் பரபரப்பாக படங்கள், விளம்பரங்கள், நகைக்கடை திறப்புகள் என ஓடிக் கொண்டிருந்த நடிகை சிநேகா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விரும்புகிறேன் (படம் வெளியான கணக்குப்படி ஆனந்தம்) படம் மூலம் அறிமுகமான ;சிநேகா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தார்.

பிரசன்னா

பிரசன்னா

கடந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை அவர் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஹரிதாஸ் படம் அவர் திருமணத்தின்போது ஒப்புக் கொள்ளப்பட்டு, திருமணத்துக்குப் பின் வெளியாகு நல்ல பாராட்டுகளைப் பெற்றது.

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்

அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், உன் சமையலறையில் மற்றும் ஒரு தெலுங்கு, கன்னடப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கர்ப்பம்

கர்ப்பம்

இந்த நிலையில் அவர் கர்ப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை நிறுத்தியுள்ளார்.

வெளிப்புற படப்பிடிப்புகள் கட்

வெளிப்புற படப்பிடிப்புகள் கட்

இதுவரை தான் ஒப்புக் கொண்ட படங்களின் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு போய் வந்த சிநேகா, கர்ப்பம் காரணமாக இப்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

பிரசன்னா மகிழ்ச்சி

பிரசன்னா மகிழ்ச்சி

மனைவி கர்ப்பமடைந்திருப்பதையடுத்து, மகிழ்ச்சியுடன் வீட்டிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறாராம் பிரசன்னா. மனைவிக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X