ட்விட்டர் தளத்தில் இணைந்த சினேகா: 4000 ஃபாலோயர்ஸ்
சென்னை: ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நடிகை சினேகா இணைந்துள்ளார். உடனே 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்வதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சினேகா.
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து, தாங்கள் நடித்து வரும் படங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ட்விட்டரில் சினேகாவின் கணவர் பிரசன்னா இணைந்து அவ்வப்போது சினேகாவைப் பற்றியும், தான் நடித்து வரும் படங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

ட்விட்டரில் சினேகா
தற்போது சினேகா ட்விட்டர் தளத்தில் தனக்கென்று தனியாக புதிய கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதனை பிரசன்னா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆதரவு கொடுங்களேன்...
" சினேகா ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள், நண்பர்களே.." என்று சினேகாவின் ட்விட்டர் தள முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

4000 ஃபாலோயர்ஸ்
@actress_Sneha என்ற சினேகாவின் ட்விட்டர் தளத்தில், இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் சினேகாவை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

நன்றி சொன்ன சினேகா
இது குறித்து சினேகா, "கிடைத்த வரவேற்பிற்கு நன்றி. மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பேர் எனது தளத்தினை பின் தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் அன்பிற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











