அடி வயிற்றில் சிசு.. அப்படியும் அசராமல்.. அடிமுறை கற்று அசத்திய சினேகா!
Recommended Video
சென்னை : சினேகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்திலும் படத்திற்காக அடிமுறை கலையை கற்று நடித்து இருக்கிறார். இது இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சினேகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பட்டாஸ் படம் கடந்த ஜனவரி 15 பொங்கலுக்கு வெளியானது, படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படத்தில் அடிமுறை தமிழரின் பழங்கால சண்டை கலை பற்றி அழுத்தமாக பேசியிருந்தார்கள் இந்த விசயம் வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பட்டாஸ் படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்தில் தனுஷ், சினேகா, மெக்ரீன் பிர்ஸாடா, நவீன் சந்திரா, நாஸர் மற்றும் கேபிஒய் சதீஷ் ஆகியோர் நடித்து இருந்தனர். படத்திற்கு விவேக் மற்றும் மெர்வீன் இசையமைத்து இருந்தனர் .
படம் வெளியானதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது அடிமுறை எனும் கலைப்பற்றி சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்திற்கென நடிகர் தனுஷ் மற்றும் சினேகா இருவரும் முறையாக பயிற்சி பெற்று அடிமுறை கற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இன்னும் ஒருபடி மேலே போய் சினேகா கர்ப்பிணியாக இருக்கும் நேரத்திலும் படத்திற்காக இந்த கலையை கற்று நடித்து இருக்கிறார். இது இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சினேகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் அடிமுறை கலையை தனுஷ் , சினேகா மற்றும் படக்குழுவுக்கு பயிற்சி கொடுத்தவர் செல்வராஜ் எனும் அடிமுறை பயிற்சியாளர். இவர் தனுஷ் மட்டுமின்றி நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் கார்த்திக்கும் பயிற்சி கொடுத்து இருக்கிறார் .
சமீபத்தில் இவர் கூறுகையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக கார்த்தி பயிற்சி எடுத்து கொண்டதாக தெரிவித்து இருந்தார். மேலும் ஜெயம் ரவியும் இரு நாட்கள் இவரிடம் பயிற்சி எடுத்து இருக்கிறார்கள்.

தனுஷ் சிறந்த நடிகர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும், பட்டாஸ் படத்திலும் அடிமுறையை கற்று அதை உடனே நடித்தும் காட்டி விடுவாராம் , தனுசின் இந்த திறன் தான் படம் விரைவில் முடிவடைந்து பொங்கலுக்கு வெளியாக முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. மொத்தமாக பட்டாஸ்க்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு தனுஷ் சினேகா பங்கு மிக அதிகம்.
தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராட்சசன் ராம்குமார் படத்திலும் நடிக்க உள்ளார். அதற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 2020ல் தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











