Rajini - என்னது தங்கச்சி வேடமா?.. கால்ஷீட்லாம் இல்லை.. சினேகா தவறவிட்ட ரஜினி படம் என்ன தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் ரஜினியின் படம் ஒன்றை சினேகா தவறவிட்டதற்கான காரணம் குறித்து தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சில் நாட்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
படுதோல்வி: ரஜினி இதுவரை நடித்திருக்கும் 169 படங்களில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. சில படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. அந்தத் தோல்வி படங்களில் ஒன்றுதான் கோச்சடையான். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மோஷன் கேப்சர் ஜானரில் அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அப்படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாததால் படுதோல்வியை சந்தித்தது.
மறுத்த சினேகா: இந்நிலையில் சினேகா அந்தப் படத்தை தவறவிட்டதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது. அதாவது கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க சினேகாவிடம்தான் முதலில் படக்குழு கேட்டார்களாம். முதலில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டுமா என சினேகா யோசித்ததாகவும்; சரி ரஜினி படத்தில் ஒரு கேரக்டர் கிடைப்பது பெரிய விஷயம் என்று முடிவெடுத்து நடிக்கவும் ஒத்துக்கொண்டாராம். ஆனால் கோச்சடையான் பட பணிகள் ஆரம்பிக்க லேட் ஆனதால் சினேகாவின் டேட்ஸ்களும் தீர்ந்துபோய்விட்டதால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











