»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்னேகாவுக்கு பார்த்திபன் கனவு மிக நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தும் பலனளிக்கவில்லை.

இப்போது அவர் கை வசம் படம் ஏதும் இல்லை. அஜீத்துடன் சேர்ந்து புக் ஆகியுள்ள ஜனா மட்டுமே அவர்கால்ஷீட் தந்துள்ள ஒரே படம். இந்தப் படமும் கூட எப்போது தொடங்குமோ, அது அஜீத்துக்கே கூட தெரியாது.

அவர் கார் ரேஸில் தீவிரமாகிவிட்டதால், படங்களில் அவரது கவனம் இப்போதைக்கு இல்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த ஸ்னேகா தனது தாயாருடன்சொந்த ஊரான ஆந்திராவுக்குச் சென்று ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு பெரிய கோவில்கள்லிஸ்டைக் கொடுத்து, இங்கெல்லாம் போய் வந்தால் தான் நல்லது நடக்கும் என்று கூறிவிட்டாராம்.

இதையடுத்து நீண்ட புண்ணிய தல யாத்திரையில் இருக்கிறார் ஸ்னேகா. அழகிருந்தும், நடிப்பிருந்தும் யாரும்கண்டு கொள்ள மறுக்கிறார்களே என்று ஸ்னேகாவுக்கு கோபமோ கோபமாம்.

சான்ஸ்கள் குறைந்து போனதற்கு அவரையும் ஸ்ரீகாந்த்தையும் வைத்துப் பரவிய செய்திகள் தான் காரணம் என்றுஅவருக்கு வேண்டப்பட்டவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். ஸ்ரீகாந்த்தின் ஆள் என்ற முத்திரை விழுந்ததால்,உடன் நடித்தால் தங்கள் இஷ்டத்துக்கு ஸ்னேகாவை வளைக்க முடியாது என்பதால் தான் இளம் ஹீரோக்கள்அவரைத் தவிர்ப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம்.

இதனால், இப்போதைக்கு ஸ்ரீகாந்திடம் பேச்சு வேண்டாம் என ஸ்நேகாவின் தாய்க்குலம் கண்டிசன்போட்டுள்ளதாகவும் கேள்வி.

ஒரு பக்கம் சான்ஸ் இல்லாமை, இன்னொரு மனதைக் கவர்ந்தவரோடு பேச விடாமல் தாயாரின் கண்டிப்பு எனதவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil