அஜித் ரசிகர்களுக்கு சினேகா கொடுத்திருக்கும் சர்ட்டிஃபிக்கேட்.. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றது. குட் பேட் அக்லியை பொறுத்தவரை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் விமர்சன ரீதியாக படம் பலத்த அடியை சந்தித்தது. இருப்பினும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் அஜித் குறித்தும் அவரது ரசிகர்கள் குறித்தும் சினேகா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

அஜித்குமார் இந்த வருடத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். ஒரே வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவது நீண்ட காலத்துக்கு பிறகு இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் விடாமுயற்சி படம் ஏகே ரசிகர்களை கவரவில்லை. அஜித்துக்கு மாஸ் சீன்களே இல்லை என்பதால்தான் அந்தப் படத்தை அவர்கள் ரசிக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Ajithkumar Sneha

குட் பேட் அக்லி: அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏகே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இயக்குநரே அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால்; ஒரு பக்கா ஃபேன் பாய் படமாக அதனை எடுத்திருந்தார். ஆனால் படத்தின் கதை அரத பழசான கதைதான். அதேபோல் திரைக்கதையிலும் பெரிய சுவாரசியம் இல்லை. இதன் காரணமாக பொதுவான ரசிகர்களுக்கு படம் ப்டிக்கவில்லை.

ஓவர் டோஸ் ஆதிக்: மேலும் படம் முழுக்க அஜித் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருந்தார். அது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர் டோஸ் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் சலிப்பும் தட்ட ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துகிறேன் என்கிற பெயரில் சம்பந்தமே இல்லாமல் ப்ளேஸ் செய்திருக்கிறார். இதெல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை என பொதுவான ரசிகர்கள் கூறினார்கள். எது எப்படியோ படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறதாம்.

அடுத்த படம்: அடுத்தும் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏகே நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இன்னொரு சர்ப்ரைஸாக தனுஷ் சமீபத்தில் சந்தித்து அஜித்திடம் கதை சொன்னதாக ஒரு தகவல் ஓடியது. ஆனால் அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான திரைத்துறையினரிடம் கருத்தாக இருக்கிறது.

சினேகா பேச்சு: இதற்கிடையே அவருக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதை வழங்கியது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அவரும் பல வருடங்கள் கழித்து பேட்டியும் கொடுக்கிறார். இந்நிலையில் அஜித்துடன் ஜனா படத்தில் நடித்த சினேகா சமீபத்தில் ஏகே குறித்து பேசுகையில், "ஜனா படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட ரசிகர்கள் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வருவார்கள்.

சொன்னதை கேட்பார்கள் அவர்கள்: அப்படி வருபவர்களிடம் அஜித், நீங்கள் வரிசையில் அமைதியாக வாருங்கள். ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வார். அவர்களும் அவர் சொன்னதை கேட்பார்கள். ஷூட்டிங் முடிந்து பொறுமையாக அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதை பார்க்கும்போது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு எளிமையாக இருப்பார். தன்னை போலவே தன்னுடைய ரசிகர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X