சினேகா அல்லது சினேகா உல்லல்?
| Click here for more images |
கெட்டவன் படத்தை கிடப்பில் போட்டுள்ள சிம்பு அடுத்து கேமராமேன் சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் சிலம்பாட்டம் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் சினேகா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. காளை படத்தில் அத்தை வேடத்தில் நடிக்க சிம்பு கூப்பிட்டபோது, அத்தை வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. வேண்டுமானால் உங்களுடன் ஆடத் தயார் என்று சினேகா கூறவே அவரை நிராகரித்தார் சிம்பு.
இந் நிலையில் சிலம்பாட்டம் படத்தில் சினேகாவுடன், சிம்பு இணைவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அது நம்ம சினேகா அல்ல, பாலிவுட் இளம் புயல் சினேகா உல்லல் எனக் கூறப்படுகிறது.
அப்படியானால் சினேகாவுக்கு என்ன ஆச்சு என்று தயாரிப்புத் தரப்பிடம் கேட்டபோது, சிம்பு இப்படத்தில் இரண்டு ஹீரோயின்களுடன் இப்படத்தில் நடிக்கிறார். இதில் நம்ம ஊர் சினேகா ஒரு நாயகியாக நடிக்கிறார். இன்னொரு முன்னணி நாயகியும் படத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் சினேகா உல்லலையும் அணுகியுள்ளனர். ஆனால் அவரிடமிருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.
இப்படத்திற்கு தினா இசையமைக்கவுள்ளார்.
சினேகா உல்லல், சல்மான் கானுடன் இணைந்து லக்கி என்ற படத்தில் நடித்து நடிகையானவர் என்பது நினைவிருக்கலாம்.
ஒரு வேளை இரண்டு சினேகாவும் இருப்பார்களோ, என்னவோ தெரியவில்லை!


Click it and Unblock the Notifications











