அப்ப தனி மனுஷி, இப்ப இல்லத்தரசி.. முடியாதே: சினேகா
சென்னை: சினேகாவைத் தேடி ஒரு படம் வந்தது. படத்தின் கதையும் சினேகாவுக்குப் பிடித்து விட்டது.. ஆனாலும் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். ஏன்..ஏன்...ஏன்..?
புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்புடன் பாசத்துடன் நேசத்துடன் பிரியத்துடன் அழைக்கப்படும் சினேகா, திடீரென பிரசன்னாவுடன் காதல் கொண்டார், திருமணமும் புரிந்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் வழக்கமாக நடிகைகள் ரிடையர்ட் ஆகி விடுவார்கள். ஆனால் சினேகா மட்டும் அப்படிச் செய்யவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவித்தார். அதன்படி நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

திருப்தி தந்த 'தி.மு.' ஹரிதாஸ்
திருமணத்திற்கு முன்பு சினேகா நடித்த கடைசிப் படம் ஹரிதாஸ். இப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் அசத்தி விட்டது, கவர்ந்து விட்டது. சினேகாவைப் பார்க்கும் அனைவருமே ஹரி புராணம்தான் பாடுகின்றனராம். இதனால் காது வரை விரிந்த புன்னகையுடன் மலர மலரக் காணப்படுகிறார் சினேகா.

தமிழ், தெலுங்கில் தலா 2
தற்போது சினேகா கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றனவாம். அதில் தாய்மொழி தெலுங்கில் 2 படம், வாழ வைத்த தமிழ் மொழியில் 2 படமாம்.

பிடிச்சிருக்கு ஆனா வேண்டாமே...
அது ஒரு தம்பதியின் கதை. அன்னியோன்யமாக இருக்கும் கணவன், மனைவி குறித்த கதை. அக்கதை சினேகாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். இருப்பினும் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.

அப்ப தனி மனுஷி.. இப்ப இல்லத்தரசியாச்சே
இதுகுறித்து சினேகா கூறுகையில், கணவன்-மனைவி அன்யோன்யத்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் படுக்கையறை காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக வைத்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டபின் இதுபோல் மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அது குடும்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும். முந்தைய படங்களில் இதுபோன்று நடித்தபோதேல்லாம் நான் தனி மனுஷி. ஆனால் இப்போது நான் இல்லத்தரசியாச்சே என்றார் சினேகா.
வாஸ்தவம்தான்!


Click it and Unblock the Notifications











