கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுறதுனா இதுதானா?.. ‘கோட்’ படத்தால் செம சந்தோஷத்தில் சினேகா.. ஓஹோ!
சென்னை: வசீகரா படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் நடித்து வருகிறார் சினேகா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சினேகா 'கோட்' படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்யின் கோட் படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை நடிகை சினேகா தளபதி ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். விரைவில், கோட் படத்தின் செகண்ட் சிங்கிளும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் 68வது படம்: நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் நடித்து வரும் 68-வது படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமே விஜய்க்கு கடைசி படமாக இருக்குமா? அல்லது 69-வது படத்திலும் அவர் நடிப்பாரா? என்கிற கேள்விகள் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் எழுந்துள்ளன.
200 கோடி சம்பளம்: பல ஹாலிவுட் நடிகர்களுக்கு இந்த அளவுக்கு சம்பளம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கோட் படத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. லியோ படத்துக்கு நடிகர் விஜய்க்கு அதிகபட்சமாக 130 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக படக்குழுவினரே சில பேட்டிகளில் கூறிய நிலையில், விஜய் 200 கோடி சம்பளம் வாங்குவார் எனக் கூறுகின்றனர்.
வசீகரா படத்துக்கு பிறகு: கடந்த 2003-ஆம் ஆண்டு செல்வபாரதி இயக்கத்தில் வெளியான வசீகரா படத்தில் விஜய் மற்றும் சினேகா இணைந்து நடித்தனர். அந்த படம் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் விஜய் மற்றும் சினேகா ஜோடிக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்து சினேகா கோட் படத்தில் நடித்துள்ளார்.
சந்தோசத்தில் சினேகா: விஜய்யுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகி வந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சினேகா படம் முழுக்க தளபதியுடன் வருவேன் என்றும் இன்னும் ஒரு நாள் தனக்கான ஷூட்டிங் பாக்கி உள்ளது. ரொம்பவே ஹேப்பியா இருக்கேன். கோட் படம் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் எனக் கூறியுள்ளார். அப்பா விஜய்யுடன் மட்டுமின்றி மகன் விஜய்யுடனும் இவருக்கு காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.
பிரசன்னாவின் மனைவி: நடிகர் பிரசன்னாவுடன் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் சினேகா இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அப்பா தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில் சினேகா நடித்ததைப் போல கோட் படத்தில் அப்பாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











