மீண்டும் சினேகா... திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் முதல் படம்!

By Shankar

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காமல் திகழும் நடிகை என்றால் அது இந்த காலகட்டத்தில் சினேகா என்றுதான் சொல்ல வேண்டும்.

2000-ல் ஆரம்பித்து, இன்று வரை தன் மவுசு குறையாமல் பார்த்துக் கொண்டு வருகிறார். இத்தனைக்கும் பெரிய ஹிட் என்று எதுவும் தரவில்லை. கிசுகிசு, எதிர்மறை செய்திகளுக்கும் குறைவில்லை.

விரும்புகிறேன்...

விரும்புகிறேன்...

சினேகா அறிமுகமானது விரும்புகிறேன் படத்தில்தான். சுசி கணேசன் இயக்கிய முதல் படம். ஆனால் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களில் சிக்கிக் கொண்டதால் அந்தப் படம் எடுபடாமலே போய்விட்டது.

ஒற்றை நாணயம்...

ஒற்றை நாணயம்...

ஆனால் அதற்கு முன் வெளியான ஆனந்தம் படம் சினேகாவை புகழின் உச்சிக்கு கொண்டுபோனது.

குறிப்பாக அந்த, ஒற்றை நாணயம் பாட்டு அவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கியது. அழகான சிரிப்பு, கச்சிதமான உடல் அமைப்பு... குடும்பப் பாங்கான வேடம், அழகான காதலி வேடம் என்றால் சினேகாதான் என்றானது. புன்னகை இளவரசி என்ற பட்டப் பெயரும் அவருக்கு சூட்டப்பட்டது.

காதல் கிசுகிசுக்கள்...

காதல் கிசுகிசுக்கள்...

சினேகா அளவுக்கு காதல் கிசுகிசுக்களில் அடிபட்டவர்கள் யாருமிருக்க முடியாது. ஸ்ரீகாந்துடன் காதல், மலேசியாவைச் சேர்ந்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம், பெங்களூர் பார்ட்டி ஒருவர் சினேகா என்மனைவி என்று கூறி பிரச்சினை செய்து ஜெயிலுக்குப் போனது, சரவணா ஸ்டோர் கிசுகிசுக்கள், கோவா படத்தின்போது நடந்த சில்மிஷங்கள் என ஏகப்பட்ட கசமுசா செய்திகள் உலா வந்தபோதும், சினேகாவை ரசிக்கவே செய்தார்கள்.

பிரசன்னாவுடன் திருமணம்...

பிரசன்னாவுடன் திருமணம்...

இத்தனை கிசுகிசுக்கள் இருந்த போதும், சினேகாவை தீவிரமாகக் காதலித்து, பெற்றோரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இந்தத் திருமணம் ஒருவகையில் பிரசன்னாவுக்கு மறுவாழ்க்கை கொடுத்திருக்கிறது தமிழ் சினிமாவில் என்றால் மிகையல்ல. வாய்ப்புகளே இல்லாமல் டல்லடித்துக் கொண்டிருந்த பிரசன்னாவுக்கு இப்போது பரவலாக வாய்ப்புகள்...

திருமணத்துக்குப் பின்...

திருமணத்துக்குப் பின்...

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று வழக்கமான ஸ்டேட்மென்ட் விடாமல், அமைதி காத்த சினேகா, இப்போது மீண்டும் பரபரவென நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதுதான் பாலிவுட் ஸ்டைல்.

ஏற்கெனவே திருமண நேரத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இப்போது அந்த ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

ஜேகே என்றொரு நண்பன்

ஜேகே என்றொரு நண்பன்

இப்போது அடுத்த படமாக, சேரன் இயக்கும் ஜேகே என்றொரு நண்பன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிக்க கையெழுத்திட்டிருக்கும் முதல் படம் இது.

சேரனுடன் மூன்றாவது படம்

சேரனுடன் மூன்றாவது படம்

சேரனுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படம் இந்த ஜேகே என்றொரு நண்பன். ஏற்கெனவே ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் படங்களில் நடித்துள்ளனர்.

தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா இரண்டையும் குழப்பிக் கொள்ளாமல் பக்கா புரொஃபஷனல் நடிகை என்ற பெயரை இதன் மூலம் தக்க வைத்துக் கொண்டுள்ளார் சினேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X