காதல் திருமணம் செய்ய மாட்டேன்! - சினேகா

கடலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் நடிகை சினேகா.
அவரைக் காண கொளுத்தும் வெளியிலிலும் குவிந்தனர் ரசிகர்கள். உடனே திரண்டு நின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து சினேகா கையசைத்தார். பதிலுக்கு ரசிகர்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆர்வத்தில் ரசிகர்கள் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸ் காரர்களும் மற்றும் கடை காவலர்களும் நடிகை சினேகாவை பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துச்சென்றனர்.
பின்னர் நடிகை சினேகா குத்து விளக்கேற்றி, கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளின் குறிப்பிட்ட டிசைன்களை எடுத்து அவர் தனது கழுத்தில் அணிந்து வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.
பின்னர் பேசிய அவர், "நான் இன்னும் நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நல்ல படங்கள்தான் முக்கியம். சம்பளமல்ல. அதனால்தான் இன்னும் கண்ணியமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக உள்ளேன்.
என் திருமணம் இப்போது நடக்காது. அப்படி நடந்தாலும் அது நிச்சயமாக காதல் திருமணமாக இருக்காது. வீட்டில் பார்க்கும் பையனைத்தான் மணப்பேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











