»   »  பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடித்து சாதித்த சினேகா

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடித்து சாதித்த சினேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினேகா மலையாள படம் ஒன்றில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கர்ப்பம், குழந்தை என்றான பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் சினேகா. அண்மையில் தான் மகனின் முதலாவது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடினார்கள் சினேகாவும், பிரசன்னாவும்.

இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார் சினேகா.

மம்மூட்டி

மம்மூட்டி

மலையாளத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா. ஏற்கனவே சினேகா மம்மூட்டிக்கு ஜோடியாக 2 மலையாள படங்களில் நடித்துள்ளார்.

பேபி சாரா

பேபி சாரா

ஹனிப் அதேனி இயக்கும் அந்த படத்தில் சினேகா நடிக்கிறார். ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் மம்மூட்டியின் ஜோடியாகியுள்ளார். இந்த படத்தில் மம்மூட்டி, சினேகாவின் மகளாக தெய்வத் திருமகள் புகழ் பேபி சாரா நடிக்கிறார்.

சினேகா

சினேகா

அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். நடித்தால் தொடர்ந்து ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று சினேகா அடம்பிடிப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.

ஹீரோயின்

ஹீரோயின்

சினேகா விரும்பியது போன்றே ஹீரோயின் கதாபாத்திரமே அவருக்கு கிடைத்துள்ளது. இது தவிர தமிழில் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரப் போவதாக கூறப்படுகிறது.

English summary
Sneha is back to acting. She will be seen in a Mammooty starrer Malayalam movie as a heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil