Sneha - காதலர் தின ஸ்பெஷல்.. புதிய தொழில் தொடங்கும் சினேகா.. ரசிகர்கள் வாழ்த்து

சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கவிருக்கிறார்.

நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் சினேகா. அழகான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு வரிசையான வாய்ப்புகளை கொடுத்தன.

Sneha Started a New Business Shop Name is Snehalayaa Silks

முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.

புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டம் சினேகாவுக்குத்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.

திருமணம்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருந்துவருகிறார்.

GOAT ரீ என்ட்ரி: இந்தச் சூழலில் சினேகா மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரம் சினேகாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது படத்தில் வரும் தந்தை விஜய்க்கு சினேகாதான் ஜோடி என்று கூறப்படுகிறது. விஜய்யும், சினேகாவும் இணைந்து ஏற்கனவே வசீகரா என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடிப்பதால் இந்த ஜோடியை ஸ்க்ரீனில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

புதிய தொழில்: மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சினேகா புதிய தொழில் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். அதன்படி சினேகாலயா சில்க்ஸ் என்ற பெயரில் பட்டுப்புடவை கடை ஒன்றை திறக்கவிருக்கிறார். இந்தக் கடை திறப்பு விழா பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை செலிபிரிட்டிகளுக்கும் வைத்திருக்கிறார். எனவே பிரபலங்கள் இந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்கியிருக்கும் சினேகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: sneha prasanna சினேகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X