நெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ!

By Shankar

செய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல்.

தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 'என்னை தெரியுமா' என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அசப்பில் ஐஸ்வர்யா ராய் ஜெராக்ஸ் மாதிரி இருப்பார்.

இப்போது சினேகா உல்லலின் படுகவர்ச்சியான வீடியோ படம் இண்டர்நெட்டில் பரவி உள்ளது. அவரே இந்த படத்தை எடுத்து வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சமீப காலமாக சினேகா உல்லல் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கினர். எனவே மீண்டும் மார்க்கெட் பிடிப்பதற்காக இந்த ஆபாச படத்தை அவர் வெளியிட்டுள்ளாராம்.

படுக்கை அறையில் அரை நிர்வாணத்தில் அவர் உருண்டு புரள்வதுபோல் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பவர் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இந்த வீடியோ படம் இருப்பதாக மீடியாவில் வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஆபாச வீடியோ குறித்து சினேகா உல்லல் கூறுகையில், "ஷூட்டிங் இல்லாமல் ஒருநாள் ஹைதராபாத் ஓட்டல் அறையில் இருந்தேன். என்னுடன் போட்டோகிராபர் நண்பர் ஒருவரும் இருந்தார். அப்போதுதான் இப்படியொரு சூடான படத்தை எடுக்கலாம் என தோன்றியது. இதை இண்டர்நெட்டில் வெளியிட நான் விரும்ப வில்லை. ஆனால் எனது போட்டோ கிராபர் நண்பர் அவரது பேஸ்புக்கில் போட்டு விட்டார். அதை மற்றவர்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

வானம், சமரன் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதுகில் அடிபட்டு காயத்துடன் இருந்ததால் நடிக்க முடியவில்லை. தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி போன்றோருடன் நடிக்க ஆசை. விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன்," என்றார்.

இந்த வீடியோவுக்கு கையோடு பலன் கிடைத்துள்ளதாம். புதிதாக இரு தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளாராம் சினேகா உல்லல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X