கொரோனாவா யாருகிட்ட.. பாறையில் அமர்ந்தபடி இது என்ன பப்பரப்பா லுக்.. சினேகாவிடம் கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
பிரபல இந்தி நடிகை சினேகா உல்லால். இவர் தமிழில் சிம்புவின் வானம், மனோஜ் மஞ்சுவின் என்னைத் தெரியுமா? ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள சினேகா, இந்தியிலும் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை.

ஐஸ்வர்யா ராய் சாயல்
கடைசியாக, ஜஸ்வந்த் கங்கானி இயக்கிய பேஸுமான் இஷ்க் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. ஐஸ்வர்யா ராயை போலவே தோற்றம் கொண்டுள்ள இவரை நடிகர் சல்மான் கான், லக்கி என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு அங்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

குணமடைந்தேன்
கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருக்கும் சினேகா உல்லால், 'எனது உடல்நிலை பிரச்னை காரணமாக நான் படங்களில் நடிக்கவில்லை. 30 நிமிடம் தொடர்ந்து நின்று வேலை செய்ய முடியாது. உடனே சோர்வாகி விடுவேன். அதனால் நடனம், நடிப்பு என்று பல மணிநேரம் பணியாற்றுவது முடியாத காரியம். அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டேன் என்று சில வருடங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

சோசியல் மீடியா
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் சினேகா உல்லால். அடிக்கடி தனது ஹாட் ஸ்டில்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பாறையில் அமர்ந்தபடி கிளாமர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஏதோ கடற்கரை அருகில் உள்ள பாறை போல் தெரிகிறது. இதற்கு கேப்ஷனாக, ஓ கொரோனா, யார்கிட்ட பேபி' என்று கூறியுள்ளார்.

சட்டப்படி தவறு
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவர் அழகை, காதலோடு புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஒருவர், உங்களை காதலிப்பது சட்டப்படி தவறு என்றால் எனது மிச்ச வாழ்க்கையை சிறையில் கழிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். என் கனவுகளின் ராணி நீங்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை கண்டதில் மகிழ்ச்சி என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

பாதுகாப்பா இருங்க
'செம ஹாட் போட்டோ.. இது, நேனு மீக்கு தெலுசா என்ற தெலுங்கு ஷூட்டிங்கில் எடுத்ததுதானே?' என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். ரொம்ப நாளா சினிமா பக்கம் காணவே இல்லையே? என்று சிலரும், அப்ப பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கீங்களே, எப்படி? என்று சிலரும் கேட்டுள்ளனர். சிலர் கொரோனா பேய்த்தனமா சுத்திகிட்டு இருக்கு, பப்பரப்பான்னு உட்கார்ந்துட்டு இருக்காதீங்க., வீட்டுல பாதுகாப்பா இருங்க என்று அட்வைஸ் செய்துள்ளனர். சினேகாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











