உன் சமையலறையில் மாதிரி கண்ணியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்- சினேகா

By Shankar

சென்னை: உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தால் நடிப்பேன், என்றார் சினேகா.

சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த 'உன் சமையலறையில்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

சிறந்த வேடம்

சிறந்த வேடம்

இந்தப் படத்தில் சினேகாவின் வேடம் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து சினேகா பேசுகையில், "உன் சமையலறையில்' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. படத்தை பார்த்து நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை பாராட்டிக் கொண்டுள்ளனர். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.

பிரசன்னா

பிரசன்னா

எனது கணவர் பிரசன்னா எல்லா விஷயங்களிலும் எனக்கு துணையாக இருக்கிறார். உற்சாகப்படுத்துகிறார். திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. சந்தோஷமாக இருக்கிறது எங்கள் குடும்ப வாழ்க்கை.

நிர்ப்பந்தம் இல்லை

நிர்ப்பந்தம் இல்லை

எந்த விஷயத்துக்காகவும் என்னை நிர்ப்பந்தப்படுத்தியதில்லை பிரசன்னா. நண்பனாக ஆலோசனைகள் சொல்வதோடு சரி.

நல்ல வேடங்கள்

நல்ல வேடங்கள்

நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பேன், எனது குடும்பத்தினர் திரையில் என்னை பார்க்கும்போது பெருமைப்படவேண்டும், முகம் சுழிக்கக் கூடாது. அதுமாதிரி கண்ணியமான வேடங்களில்தான் நடிப்பேன். நிச்சயம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.

கண்ணியமான வேடம்

கண்ணியமான வேடம்

வயதான வேடங்களில் நடிக்கவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. நல்ல கதையும், உன் சமையல் அறையில் படத்தில் அமைந்த மாதிரி கண்ணியமான பாத்திரமும் அமைந்தால் என் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்," என்றார்.

More from Filmibeat

Read more about: sneha சினேகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X