ஹீரோயின்
விரும்புகிறேன் படத்தின் நாயகி ஸ்நேகா ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தில் நடித்தவர். தமிழில் தான்அறிமுகமாகிறேன் என்று பொய்மூட்டையை அவிழ்த்து விட்டார்.
இப்பொழுது விரும்புகிறேன் படம் வெளிவரும் முன்பு வேறு படத்தில் நடிக்க மாட்டேன் என்று வாய்மொழிஅக்ரிமெண்ட் போட்டிருந்ததை உடைத்து விட்டு மாதவனுடன் சுகம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
எழுத்து மூலம் அக்ரிமெண்ட் போடாத டைரக்டர் சுசி.கணேசன், பிரச்சனையை நடிகர் சங்கம் வரை கொண்டுசென்றார். முதல் படத்தில் நடிக்க வைத்த நீங்கள் எழுத்து மூலம் ஏன் ஒப்பந்தம் போடவில்லை. அது உங்கள் தவறுதானே என்று நடிகர் சங்கம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதாம்.
ஸ்நேகாவின் உண்மைப் பெயர் சுஹாசினி. இவருடைய சித்தப்பாதான் டான்ஸ் மாஸ்டர் கலாவைத் திருமணம்செய்துகொள்ளப் போகிறார். ஆரம்பத்திலேயே பிரச்சினைக்குரியவர் என்று பெயரெடுத்திருக்கிறார் ஸ்நேகா.
ஆரம்பமே அரோகராவா?


Click it and Unblock the Notifications











