»   »  ஸ்னேகா மறுக்கிறார் நாக்ரவியுடன் ஸ்னேகா

ஸ்னேகா மறுக்கிறார் நாக்ரவியுடன் ஸ்னேகா

Subscribe to Oneindia Tamil
நாக்ரவியுடன் ஸ்னேகா

தனக்கு நிச்சயதார்த்தம் ஏதும் நடக்கவில்லை என நடிகை ஸ்னேகா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவரைத் திருமணம் செய்யப் போகும் நாக்ரவியுடன் ஸ்னேகா எடுத்துக் கொண்ட படங்கள் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.

மலேசியாவில் வசிக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபரான நாக்ரவிக்கும் ஸ்னேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகசில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தன.

கேசட் வெளியீட்டு விழாவில் ஸ்னேகா, பின்னால் நாக்ரவி

கோடீஸ்வரரான நாக்ரவி இந்தியப் படங்களை வெளிநாடுகளில் திரையிடும் வினியோக நிறுவனம் நடத்தி வருகிறார்.

இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இதனை ஸ்னேகா மறுத்துள்ளார். இது தொடர்பாகஇன்று ஸ்னேகா அளித்த பேட்டி:

மோதிரம் மாற்றும் நாக்ரவி-ஸ்னேகா

தமிழ் சினிமாவில் அதிகளவில் கிசுகிசுவில் சிக்கிய நடிகை நானாகத் தான் இருப்பேன். நாக்ரவி எனது அண்ணனின் நண்பர்.மலேசியாவில் பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால், எங்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தியில்உண்மையில்லை.

ஹைதராபாத்தில் ஒரு கேசட் வெளியீட்டு விழாவில் தான் சந்தித்தோம். அது தொடர்பான படம் தான் வெளியாகியுள்ளது (அதில்முன் வரிசையில் ஸ்னேகாவும் பின் வரிசையில் நாக்ரவியும் அமர்ந்திருக்கின்றனர்). மற்றபடி நானும் அவரும் இருப்பது போன்றபிற படங்கள் போலியானவை.


அதில் இருப்பது நான் அல்ல. அவை ஜோடிக்கப்பட்ட படங்களாக இருக்கலாம். எனக்கு 3 வருடம் கழித்துத் தான் திருமணம்நடக்கும் என்றார் ஸ்னேகா.

ஆனால், ஸ்னேகா-நாக்ரவி நிச்சயதார்த்தம் முடிந்த பின் எடுக்கப்பட்ட படங்கள் என்ற பெயரில் சில படங்கள் வெளியில்வந்துள்ளன.

அதில் நாக்ரவியுடன் இருப்பது தான் இல்லை என ஸ்னேகா மறுக்கிறார்.

ஸ்னேகாவுக்கு டும்..டும்..?

Read more about: sneha denies marriage plans

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil