அடேங்கப்பா நயன்தாரா தவறவிட்ட படங்கள் இத்தனையா?.. ஒன்னு நடிச்சிருந்தாலும் வேற மாதிரி இருந்திருக்குமே

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் நயன்தாரா தவறவிட்ட படங்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

So many films that Nayanthara missed Here is the full Details

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

தவறவிட்ட படங்கள்: இந்நிலையில் நயன்தாரா தனது கரியரில் தவறவிட்ட படங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி - தமன்னா நடித்த பையா படத்தில் ஹீரோயினாக முதலில் நயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் நயன் அப்போது அதிக சம்பளம் கேட்டதால் அந்த முடிவிலிருந்து படக்குழு பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் உதயநிதி ஹீரோவாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் ஹீரோயினாக நடிக்க வைக்க நயனிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.. ஆனால் சில காரணங்களால் அதை ஒத்துக்கொள்ளவில்லையாம் நயன்.

அப்போவே ஹிந்தி: நயன் தற்போது ஹிந்தியில் இண்ட்ரோ ஆகியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த வாய்ப்பு அவருக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. ஏதோ காரணத்தால் அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம் நயன். அவருக்கு பதிலாக தீபிகா படுகோனே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லெஜண்ட் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X