Amala Paul: லவ்வை ரொம்பவும் மிஸ் யூஸ் செய்யறாங்க.. வேதனையோடு பேசிய அமலா பால்.. இப்படி பேச என்ன காரணம்?
சென்னை: நடிகை அமலா பால் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான மற்றும் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். பலரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களை தைரியமாக ஏற்று நடிக்கும் நடிகையான இவர் தற்போது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா என இரண்டையும் ஒரு சேர மேனேஜ் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமானார். அதற்கு முன்னர் இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அவருக்கு பெயரும் புகழும் வாங்கித் தந்தது தமிழ் சினிமாதான். தமிழில் இவர் அறிமுகமான 2010ஆம் ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸானது. வீரசேகரன், சிந்து சமவெளி மற்றும் மைனா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இந்த மூன்று படங்களில் அமலா பாலை ரசிகர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்ற படம் என்றால் அது மைனா படம் தான்.
இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதிலும் குறிப்பாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என இவர் கலக்கி வந்தார். தலைவா படத்தில் பணியாற்றியபோது இயக்குநர் விஜய்யை காதலித்தார். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

அமலா பால்: அதன் பின்னர் சினிமாவில் கவனம் செலுத்திய அமலா பால் தனது நண்பர் தேசாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2023ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலாய் என பெயரிட்டார்கள். அவர்களின் குடும்ப வாழ்க்கை செம ஜாலியாக சென்று கொண்டுள்ளது. அவ்வப்போது அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் மில்லியன் கணக்கில் குவிந்து வருகிறது.
லவ்: இந்நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் கலந்து கொண்ட விருது விழாவில் பேசியது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, " நிறைய பேர் லவ் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள். லவ் என்பது இந்த உலகத்திலேயே அதிகம் மிஸ் யூஸ் செய்யப்படுகிற வார்த்தை. லவ் என்று சொல்லி ரொம்பவும் டார்ச்சர் செய்யறாங்க. லவ்வை ரொம்பவும் டாக்சிக்கான விஷயமாக மாற்றுகிறார்கள். அதுதான் இப்போது இந்த உலகத்தில் நிறைய நடந்து கொண்டு உள்ளது" என்று பேசியுள்ளார்.

கேள்வி: அவரது இந்த பேச்சு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. மேலும் அமலா பாலின் திருமண வாழ்க்கை ஜாலியாகத்தான் சென்று கொண்டுள்ளது. அப்படி இருக்கும்போது, காதல் குறித்து ஏன் இப்படி ஒரு அபிப்ராயத்தை வைக்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











