ரொம்ப அழகா இருக்கீங்க.. யாஷிகா ஆனந்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளினி.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த பிரபல தொகுப்பாளினி, யாஷிகாவின் அழகை வர்ணித்துள்ளார்.

Recommended Video

Manimegalai Lock down paridhabangal | Quarantine | Lock Down Diaries

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

சின்ன பொண்ணு

சின்ன பொண்ணு

1999ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. ஆனால், 2016ம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமாகி வரும் யாஷிகா ஆனந்துக்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

கடந்த 2018ம் ஆண்டு சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில், கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, ஷாரா, சந்திரிகா ரவியுடன் இணைந்து யாஷிகா ஆனந்த் செகண்ட் ஹீரோயின் ரோலில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைய இந்த படம் அவருக்கு மிகவும் உதவியது.

பிக்பாஸ் சீசன் 2

பிக்பாஸ் சீசன் 2

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்துக்கு, அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளையும், ரசிகர்களையும் அள்ளி வருகிறார்.

பேரழகி

பொதுவாக ஒரு பெண் அழகா இருக்காங்கன்னு இன்னொரு பெண் வர்ணிக்க மாட்டாங்க, அதையும் தாண்டி யாஷிகா ஆனந்த் ஈஸ்டரை முன்னிட்டு பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன் So Pretty என கமெண்ட் போட்டுள்ளார்.

நெருங்கிய நட்பு

நெருங்கிய நட்பு

ஆர்.ஜே., விஜய் டிவி தொகுப்பாளினி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத் திறமை கொண்ட பாவனா பாலகிருஷ்ணனுக்கும் விஜய் டிவி வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்துக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. அந்த நட்பின் வெளிப்பாடே இப்படியொரு கமெண்ட் வர காரணம்.

ரிலீசுக்கு தயாராக

ரிலீசுக்கு தயாராக

யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜாம்பி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது யாஷிகா நடிப்பில் உருவாகி உள்ள ஆரவ்வின் ராஜ பீமா மற்றும் மகத்தின் இவன் தான் உத்தமன் என இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கொரோனா பாதிப்பு காரணத்தால் அந்த படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X