2வது ஹனிமூனா?.. ஏர்போர்ட்டில் நாக சைதன்யா - சோபிதா என்ன மேட்டரு?.. சமந்தா லுக் பார்த்தீங்களா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா ரட்சகன் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். பல வருடங்கள் கழித்து கார்த்தியின் தோழா படத்தில் நடித்திருந்தார். மீண்டும் இந்த ஆண்டு தனுஷின் குபேரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய பிரியாணி விருந்தே வைக்க காத்திருக்கிறார்.
நாகார்ஜுனாவின் மகன் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அவருக்கு அந்த படம் தோல்விப் படமாக மாற மீண்டும் டோலிவுட்டில் மட்டுமே நடித்து வருகிறார். சென்னை பொண்ணான சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா அவருடன் குழந்தைகள் ஏதும் பெற்றுக் கொள்ளாத நிலையில், விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன் பின்னர், பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா அவரை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே இருவரும் வெளிநாட்டுக்குச் சென்று ஹனிமூன் சென்று வந்த நிலையில், தற்போது மீண்டும் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போயுள்ளது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
2வது ஹனிமூனா?: சோபிதா துலிபாலா சமீபத்தில் வேவ்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் லூஸான உடையை அணிந்திருந்ததை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக உள்ளாரா என கேள்விகளை எழுப்பினர். ஆனால், அந்த வதந்திக்கு குடும்பத்தில் இருந்து சிலர், இல்லை என்கிற பதிலை வெளியிட அந்த ரூமர் அப்படியே அமைதியானது. இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன.
சோபிதா துலிபாலா பிறந்தநாள்: வரும் மே 31ம் தேதி நடிகை சோபிதா துலிபாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகத்தான் தனது ஆசை மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நாக சைதன்யா என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ஒரு வாரத்துக்கு வெளிநாட்டில் தான் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடப் போவதாக கூறுகின்றனர்.

சமந்தாவின் டிரெஸ் பார்த்தீங்களா?: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா விமான நிலையத்தில் தென்பட்ட நிலையில், மும்பையில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நடிகை சமந்தா செம கவர்ச்சியாக சைடு முழுக்க காத்து வாங்குவதுபோல கட் வைத்த உடையை அணிந்துக் கொண்டு பங்கேற்ற காட்சிகளும் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. நடிகை சமந்தாவும் கூடிய சீக்கிரமே 2வது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் இயக்குநருடன் நெருங்கிய நட்புறவில் ஈடுபட்டு வருகிறார் என்றும் பேச்சுக்கள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றன. சமந்தா தயாரிப்பில் வெளியான சுபம் படத்தைத் தொடர்ந்து சமந்தா தனது பேனரில் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் இன்னமும் ஆரம்பிக்காமல், மும்பையிலேயே சமந்தா முகாமிட்டு வருவது ஏன் என்கிற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஹேப்பியா இருக்கணும்: உடல்நலக்குறைவு காரணமாகத்தான் சமந்தாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்ததாகவும் கூடிய விரைவில் அவரும் இன்னொரு திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











