திருமணத்துக்கு முன்பே சோபிதா துலிபாலவுக்கு இப்படியொரு கொடுமையா?.. சமந்தாவுக்கும் இதுதான் நடந்ததா?

ஹைதராபாத்: தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் அப்பா வயதான அனில் கபூருடன் பலமுறை லிப் லாக் காட்சிகளில் நடித்து பகீர் கிளப்பியிருந்தார் சோபிதா துலிபாலா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சோபிதா துலிபாலா.

இவருடன் ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் நடிகை சமந்தாவை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்தார் எனக் கூறப்படுகிறது. சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாக சைதன்யா அடுத்ததாக சோபிதா துலிபாலாவை கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நல்ல நாள் பார்த்து நிச்சயமும் செய்துக் கொண்டார்.

sobhita dhulipala naga chaitanya samantha

இந்நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு முன்பே நாக சைதன்யா வீட்டில் இருந்து சமந்தாவுக்கு வந்தது போல சில கண்டிஷன் டார்ச்சர்கள் சோபிதா துலிபாலாவுக்கு கிளம்பியிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

நாக சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம்: ஹாலிவுட் படமான மங்கி மேன் படம் வரை நடித்த சோபிதா துலிபாலா கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யாவை நிச்சயம் செய்துக் கொண்டார். சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்த நாக சைதன்யா தொடர்ந்து வெளிநாடுகளில் சோபிதா துலிபாலாவுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் இருவரது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sobhita dhulipala naga chaitanya samantha

இழுத்துப் போர்த்திய சோபிதா: போல்ட் போட்டோஷூட்களை நடத்தி வந்த சோபிதா துலிபாலா பட புரமோஷன்களுக்கு எல்லாம் படுகவர்ச்சியாகத்தான் இதுவரை உடையணிந்து வருவாராம். ஆனால், அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி சோபிதா நடித்துள்ள லவ் சிதாரா திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. அதன் புரமோஷன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிலையில், வெறும் சேலை மட்டுமே அணிந்து வந்தாராம். அதே போல ஏர்போர்ட்டில் வருகை தரும் போதும் இழுத்துப் போர்த்திக் கொண்டு வேறு ஆள் மாதிரி சோபிதா காட்சி தந்தது பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

sobhita dhulipala naga chaitanya samantha

சமந்தாவுக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகை சமந்தாவும் திருமணத்துக்குப் பிறகு கிளாமர் ரோல்களை தவிர்த்து விட்டு சேலை மற்றும் சுடிதார் அணிந்து மட்டுமே பல படங்களில் நடித்தார். ஃபேமிலி மேன் வெப் தொடருக்காக அவர் படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் பிரச்சனை வெடிக்கவே காரணமாக அமைந்தது என்றும் கூறுகின்றனர். தற்போது நாகார்ஜுனாவின் மருமகளாக டோலிவுட்டின் பெரிய குடும்பத்தில் நுழைய காத்திருக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் குடும்பத்தினர் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்து விட்டனர் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

sobhita dhulipala naga chaitanya samantha

4000 கோடி சொத்து: நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு சுமார் 4000 கோடி அளவு இருக்கும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியொரு பெரிய குடும்பத்தில் மருமகளாக செல்ல சில பல தியாகங்களை சோபிதா துலிபாலா செய்து தான் ஆக வேண்டும் என்றும் இனிமேல் அவருடைய படங்களில் குடும்பத்தினரின் தலையீடு அதிகம் இருக்கும் என்றும் டோலிவுட்டில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. சமீப காலமாக இன்ஸ்டாகிராமிலும் சோபிதா டோட்டலாகவே மாறியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X