Sobhita Net Worth: சமந்தா அளவுக்கு எல்லாம் இல்லை.. சோபிதா துலிபாலா சொத்து மதிப்பு இவ்வளவு தானா?
ஹைதராபாத்: 32 வயதாகும் நடிகை சோபிதா துலிபாலாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நாக சைதன்யா நேற்று நிச்சயம் செய்துக்கொண்டது டோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் சோபிதா துலிபாலாவின் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்களின் வாழ்க்கையில் நடிகைகளை காதலிப்பது திருமணம் செய்துக் கொள்வது, விவாகரத்து செய்வது, பின்னர் மீண்டும் ஒரு நடிகையை காதலிப்பது அவரை திருமணம் செய்துக் கொள்வது எல்லாம் சகஜமான விஷயமாகவே மாறிவிட்டது.

ஒரு சில நடிகர்களை தவிர பல நடிகர்கள் இரண்டு, மூன்று திருமணங்களை சர்வ சாதாரணமாக செய்துக் கொண்டு தான் வாழ்ந்து வருகின்றனர். அதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நடிகை சோபிதா துலிபாலா தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு பற்றிய ஆராய்ச்சிகளும் இணையத்தில் அதிகரித்துள்ள நிலையில், அந்த தகவல் குறித்து இங்கே காணலாம்.
பொன்னியின் செல்வன் நடிகை: சோபிதா துலிபாலா என்றதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்தாரே அவரா இவர். அவரைத்தான் நாக சைதன்யா இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என ஆச்சர்யத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட்டில் அறிமுகம்: மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலாவுக்கு முதல் படமே இந்தியில் கிடைத்தது. 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் தான் ஹீரோயினாக சோபிதா அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த சோபிதாவுக்கு தெலுங்கில் 2018ம் ஆண்டு ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.

ஹாலிவுட் படத்திலும்: மூத்தோன், குரூப் என மலையாள படங்களில் நடித்த சோபிதா தமிழில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் வானதியாக நடித்தார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஹீரோ தேவ் படேல் இயக்கி நடித்த மங்கி மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவருடன் நட்பு ஏற்பட்டு அவரை காதலித்து வந்திருக்கிறார் சோபிதா துலிபாலா.

சொத்து மதிப்பு: நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு 80 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில், சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு வெறும் 7 முதல் 10 கோடி தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆகும் நிலையில், பெரிதாக இன்னமும் சம்பாதிக்கவில்லை என்றும் ஒரு படத்துக்கு 1 கோடி ரூபாய் தான் இவருக்கு சம்பளம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











