மாடலிங் செய்தபோது என்னை அப்படித்தான் சொன்னார்கள்... பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா ஒபன்

மும்பை: 2016ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.O படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஷோபிதா துலிபலா.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் வெளியான தி நைட் மேனேஜர் என்ற வெப் சீரிஸில் அடல்ட் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் ஷோபிதா.

இந்நிலையில், மாடலிங்கில் வாய்ப்புத் தேடிய தருணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

 மாடலிங் ஷோபிதா துலிபலா

மாடலிங் ஷோபிதா துலிபலா

ஆந்திராவைச் சேர்ந்த ஷோபிதா துலிபலா, தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். மாடலிங்கில் இருந்து திரையுலகம் சென்றவருக்கு முதலில் ராமன் ராகவ் 2.O என்ற இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என இப்போது பல மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக மாடலிங் செய்து வந்தார் ஷோபிதா.

 மிக மோசமான அனுபவம்

மிக மோசமான அனுபவம்

மலையாளத்தில் மூத்தோன், குரூப் படங்கள் ஷோபிதாவுக்கு நல்ல அடையாளம் கொடுத்தது. முக்கியமாக தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், இவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றுவிட்டது எனலாம். வானதி கேரக்டரில் ராட்சச மாமனே என ஆட்டம் போட்டவர், மாடலிங் செய்தபோது நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

 அப்படியெல்லாம் சொன்னார்கள்

அப்படியெல்லாம் சொன்னார்கள்

தான் மாடலாக இருந்த நாட்களில் மும்பையில் நிறைய கம்பெனிகளுக்கு அடிக்கடி சென்று ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால், அப்போது யாரும் எனக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் கொடுக்கவில்லை. நான் அழகாகவும் கவர்ச்சியாகவும் இல்லையென ஒரு விளம்பர கம்பெனியினர் முகத்தில் அறைந்ததுபோல் சொன்னார்கள். மேலும், அழகிகளின் பின்னால் நிற்கக்கூட நீ ஒர்த் இல்லை என்பது போல கமெண்ட்ஸ் செய்தனர்.

 இன்று எல்லாமே மாறிவிட்டது

இன்று எல்லாமே மாறிவிட்டது

அவர்களின் கமெண்ட்ஸ்களை கண்டுகொள்ளாமல், நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு திரும்பிவிடுவேன். எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு கம்பெனியின் ஆடிஷனுக்காக சென்றேன். அப்போது என்னை ரிஜக்ட் செய்தவர்கள், இப்போது நான் பிரபலமானதும் அவர்களது கம்பெனியின் அம்பாசிடராக மாற்றிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து அவர்களது விளம்பரத்திலும் நடித்தேன் என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

 அவருடன் காதலா.. உண்மையாவா?

அவருடன் காதலா.. உண்மையாவா?

சில தினங்களுக்கு முன்னர் ஹாட்ஸ்டாரில் வெளியான தி நைட் மேனேஜர் வெப் சீரிஸில் காவேரி தீக்‌ஷின் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அனில் கபூரின் காதலியாக பிகினியோடு நடித்துள்ள ஷோபிதா, கிளாமர் காட்சிகள், லிப் லாக் சீன்ஸ்களிலும் புகுந்து விளையாடியுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஹிட்டடித்த நிலையில், ஷோபிதாவின் மார்க்கெட்டும் இப்போது ஏறத் தொடங்கியுள்ளது. இதனிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக தகவல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X