இந்திய ஏஞ்சலினா ஜோலியாம்ல! கருப்பு கிளாமரில் மணிரத்னம் பட நடிகை.. நீங்களுமா என வியக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோவை பார்த்து நீங்களுமா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருபவர், நடிகை ஷோபிதா துலிபாலா.

பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான இவர், அனுராக் காஷ்யப் இயக்கிய ராமன் ராகவ் 2.0 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மிஸ் எர்த் இந்தியா

மிஸ் எர்த் இந்தியா

இந்த படம் கான் திரைப்பட விழாவில் திரையிட்டபோது, சிறந்த துணை நடிகைக்காக விருது இவருக்கு கிடைத்தது. முன்னாள் மிஸ் எர்த் இந்தியாவான இவர், பிறகு கூடாச்சாரி என்ற த்ரில்லர் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். மலையாளத்தில் மூதோன், ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கும் லக்ஷ்மி பாம் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறார்.

வெப் தொடர்கள்

வெப் தொடர்கள்

ஆந்திராவைச் சேர்ந்த ஷோபிதா, வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிடாத நடிகைகளில் ஒருவர் ஷோபிதா. எப்போதாவது புகைப்படங்களை பதிவு செய்தாலும், கிளாமர் போட்டோஸ் பதிவிடுவதில்லை.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோ, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த போட்டோவில் கருப்பு நிற ஆடை அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ஷோபிதா. இந்த போடோஷூட் போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளனர். கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர்.

அழகாக இருக்குமா?

அழகாக இருக்குமா?

ஒருவர், என்ன ஷோபி நீங்களுமா இப்படி என்று கேட்டுள்ளார். சிலர், கருப்பு மற்றவர்களுக்கு இவ்வளவு அழகாக இருக்குமா? என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். பலர் ஸ்டன்னிங், கார்ஜியஸ், உங்கள் கண்கள் இருக்கே என்று கண்படி வர்ணித்துள்ளனர். ஒரு நெட்டிசன், 'பாதிப்பு அதிகமாயிடுச்சு, இதுல இருந்து எப்படி மீள்வேன்னு தெரியலையே என்று கூறியுள்ளார். இன்னொருவர் இந்தியாவின் ஏஞ்சலினா ஜோலி என்று புகழ்ந்துள்ளார்.

வேற லெவல்

வேற லெவல்

இன்னொருவர், இந்த போட்டோ பார்த்ததும் என் ஹார்ட்டே நின்னுபோச்சு என்று கூறியுள்ளார். ஓவியம் மாதிரியே இருக்கீங்க என்று சிலரும் உங்களிடம் இருப்பதிலேயே இந்த போட்டோ வேற லெவல் என்று சிலரும் கடைசியாக இந்த இளவரசியும் கிளாமருக்கு வந்துவிட்டார் என்று சிலரும் கூறியுள்ளனர். ஒரு நெட்டிசன், நீங்கள் எப்படிபட்ட அழகு என்பதை விவரிக்க வேறொன்று இல்லை என்று ஓவராக வழிந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X