சமந்தாவை சோபிதா வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறார்.. ஓபனாக பேசிய செய்யாறு பாலு. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: சமந்தா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் சமந்தா - சோபிதா துலிபாலா பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

சமந்தாவின் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியானது. தனிப்பட்ட பிரச்னைகள், உடல்நல பிரச்னை என தடைகளை தாண்டி அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் படுதோல்வியடைந்தது. அதனையடுத்து நடிப்பிலிருந்து குட்டி பிரேக் எடுத்தார் அவர். அதற்கு காரணம் அவரது உடல்நல பிரச்னைதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் சமந்தாவோ அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார்.

samantha naga chaitanya

சிட்டாடல்: சூழல் இப்படி இருக்க இப்போது அவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட வெப் சீரிஸை இந்தியாவில் ரீமேக் செய்திருக்கிறார்கள் ராஜ்&டிகேவும். இவர்கள் ஏற்கனவே சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 7ஆம் தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ஆக்‌ஷன் சமந்தா: ட்ரெய்லருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார் சமந்தா. மேலும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அட சமந்தா பின்னி பெடலெடுக்கிறாரே என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர். நிச்சயம் இந்த வெப் சீரிஸ் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா.

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே அவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களில் அவர்கள் தங்களது பிரிவை அறிவித்தனர். சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஹைதராபாத்தில் சிம்பிளாக நடந்து முடிந்தது. திருமணமும் விரைவில் நடக்கவிருக்கிறது. அதேசமயம் சமந்தாவும் விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவரது ரசிகர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேண்டுமென்றே செய்தார்: ஆனால் இரண்டாவது திருமணத்தில் தனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் உரையாடலில் சமந்தா தெளிவுப்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யா - சமந்தா இருவரும் தங்களது காதலை சொன்ன தேதியில்தான் நடைபெற்றது. அதனை கவனித்த ரசிகர்கள்; வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள் என்று பேச ஆரம்பித்தனர்.

செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "சோபிதா துலிபாலா தன்னை ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவரது முப்பாட்டன்கள் எல்லாம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். சமந்தாவை எப்படியெல்லாம் வெறுப்பேற்ற முடியுமோ அதனை சோபிதா துலிபாலா செய்துவருகிறார். சமந்தா நாயாக பிறக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரது தங்கை பெயரும் சமந்தாதான். ஆனால் நடிகை சமந்தாவை வெற்றுப்பேற்றுவதற்காகவே அவர் வேண்டுமென்றே அவ்வாறு பதிவு செய்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X