அச்சோ சமந்தா பற்றி சோபிதா இப்படி சொல்லிட்டாங்களே.. நிச்சயம் ஆன கையோடு ட்ரெண்டாகும் போஸ்ட்

ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை நாகார்ஜுனாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் சோபிதா துலிபாலா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நாக சைதன்யா பிறந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்தார். அவர்களுக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். இப்போது நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவி அமெரிக்காவில் வசித்துவருவதாக கூறப்படுகிறது. அங்கு சென்று நாக சைதன்யா சந்திப்பாராம்.

Samantha Naga Chaitanya

நாக சைதன்யாவும் நடிகர்: நாக சைதன்யாவும் 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர்; கடைசியாக கஸ்டடி படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக தண்டெல் என்ற படத்தில் நடித்துவருகிறார் நாக சைதன்யா. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் அவர்.

திருமணம் டூ பிரிவு: இதற்கிடையே சமந்தாவை காதலித்து வீட்டு சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சைதன்யா. அவர்களது திருமணம் வாழ்க்கை சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் திடீரென தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர் நாக சைதன்யாவும், சமந்தாவும். அதற்கு சமந்தா நடித்ததுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

நிச்சயதார்த்தம்: திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறிய பிறகு சமந்தா இன்றளவும் சிங்கிளாக இருந்துவருகிறார். ஆனால் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் சென்றுவருவதாக கூறப்பட்டது. அதனை இருவருமே மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக முடிந்தது.

உறுதி செய்த நாகா: இதுகுறித்து நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் சோபிதா, நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதை அறிவிப்பதில் சந்தோஷம் அடைகிறேன். சோபிதாவை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்கிறேன். அவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது' என்று குறிப்பிட்டிருந்தார்.

சோபிதா போஸ்ட்: இந்நிலையில் சோபிதா துலிபாலாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் தனது தந்தையுடன் இருக்கும் சிறு வயது ஃபோட்டோவை பகிர்ந்து, 'ஒவ்வொரு பிறவியிலும் நான் எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மகளாக பிறக்க வேண்டும். எனது தங்கை சமந்தா நாயாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறக்கட்டும். அதைப் பற்றி கவலையில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X