திருமணத்துக்கு பின்பும் நாக சைதன்யாவுக்கு அதை செய்யாத சோபிதா துலிபாலா?.. என்ன திருமண வாழ்க்கையோ?

சென்னை: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்திருந்த நாக சைதன்யா சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார். அவரைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் காதல் மலர்ந்தது. அதனையும் திருமணம் வரை அழைத்து செல்ல குடும்பத்தினர் சம்மத்தித்தார்கள். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு ஹைதரபாத்தில் இருவரும் மணமுடித்தனர். இந்நிலையில் சோபிதா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நாக சைதன்யாவும், சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது காதலித்தார்கள். சில காலத்திலேயே திருமணமும் நடந்தது. திருமணம் செய்துகொண்ட பிறகும் நடித்து வந்த அவருக்கு, சைதன்யாவுக்கும் விவாகரத்தும் நடந்தது. இது ஒருபக்கம் இருக்க மையோசிடிஸ் நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். ஒருவழியாக அத்தனை சிக்கல்களையும் கடந்து இப்போது ராஜ் நிடிமொருவை திருமணம் செய்திருக்கிறார்.

அவருக்கும் இரண்டாவது திருமணம்: இதற்கிடையே சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இந்தக் காதலுக்கும் தந்தையான நாகார்ஜுனா க்ரீன் சிக்னல் கொடுக்க இரண்டு பேருக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. அத்திருமணம் ஓரளவுக்கு சிம்ப்பிளாகவே நடந்தது. திருமணத்துக்கு பிறகு எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.

Sobitha Dhulipala Says She Never Cooked After Marriage Orders Food Daily
Photo Credit:

சோபிதா பேட்டி: சோபிதாவும் திரைத்துறையிலிருந்து முழுவதுமாக ஒதுங்கவில்லை. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு தன்னாலான முடிந்த சப்போர்ட்டை செய்துவருகிறார் நாக சைதன்யா. இந்நிலையில் சோபிதா கொடுத்த பேட்டி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இப்போது அவர் நடித்திருக்கும் Cheekatilo பட ப்ரோமோஷனையொட்டி கொடுத்த அந்தப் பேட்டியில் உணவு முறை குறித்து பேசிய அவர், "திருமணத்துக்குப் பிறகு அவர் ஒருமுறைகூட சமைத்ததே இல்லை என்றும், தினமும் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது" என குறிப்பிட்டார்.

சோபிதாவின் உணவு பழக்கங்கள்: தனது உணவு பழக்கங்களைப் பற்றி பேசிய அவர், பல்வேறு வகையான உணவுகளை முயற்சி செய்வதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக விளக்கினார். ஹைதராபாத்தில் புனுகுலு, சமோசா, மிரபக்காய் பஜ்ஜி, டிஃபன் போன்றவை எங்கு நன்றாக இருக்கும் என்று நண்பர்கள், உறவினர்களிடம் அடிக்கடி கேட்டு, அதன்படி தான் உணவு ஆர்டர் செய்வதையும் வெளியே போய் சாப்பிடுவதையும் முடிவு செய்வேன் என்றார்.

அதேபோல், குறிப்பிட்ட ஏதாவது ஒரு உணவை மிகவும் விரும்பினாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் என்பதில் உறுதியாக இருப்பேன். நல்ல உணவை எப்படி ரசிக்கிறோமோ அதேபோல் உடல்நலத்தையும் கவனமாக பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ திருமணத்துக்கு பிறகு ஒருமுறைகூட சமைத்ததில்லையா என்ன திருமண வாழ்க்கையோ என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் உணவை வீட்டில் சமைத்தால்தான் இந்திய பெண் என்று அர்த்தமா அது அவர்களது விருப்பம் எனவும் ஆதரவு குரல்கள் கேட்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X