ப்பா.. இமய மலையில் இட்லி துணியுடன் இப்படி நிக்கிறாங்களே.. பார்த்தாலே பசங்களுக்கு ஜுரம் வந்துடுமே!

ஹிமாச்சல்: குஜராத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சோஃபியா அன்சாரி இமய மலைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே பிகினி உடையை அணிந்துக் கொண்டு செம சூடாக கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் இன்ஸ்டாகிராமை கதிகலங்க செய்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் பல பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு 13 மில்லியன் ஃபாலோயர்களை இவர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள் தான் பிகினி உடைகளில் போட்டோக்களை போட்டு கவர்ச்சியை கன்னா பின்னாவென காட்டுவார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் அடுத்த கட்டத்துக்கு ஆடையே அணியாமல் போஸ் கொடுக்க ஆரம்பித்த நிலையில், இந்திய நடிகைகள் இப்படி இட்லி துணியுடன் கவர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

Sofia Ansari heroine glamour

அதிலும், இவர் இமய மலை அருகே இருந்துக் கொண்டு இப்படியொரு போஸ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி விட்டது. ஏன்மா உனக்கு குளிராதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாரு இந்த சோஃபியா அன்சாரி: சமீபத்தில், காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஏகப்பட்ட பிளேட்டுகளை வைத்து அறுவை சிகிச்சை செய்தேன் என போட்டோ ஒன்று போட்டு அனைவரையும் கலங்கடித்தவர் தான் இந்த சோஃபியா அன்சாரி. ஓடிடி வெப்சீரிஸ்களிலும் பாலிவுட்டில் சில படங்களிலும் நடித்து பிரபலமான இவரை குஜராத்தின் குல்ஃபி ஐஸ் என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். எம் எக்ஸ் டகா டக் ஃபேம் ஹவுஸ், ரவ்னீத் சிங், பில்லோ டவுன், வாஹல் நோ தாரியோ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இமய மலையில் இட்லி துணியுடன்: கடந்த சில நாட்களாக சென்னையிலேயே காலையில் வெள்ளை பனி மூட்டம் சாலைகளே தெரியாத அளவுக்கு இருக்க இமய மலை எல்லாம் எப்படி குளிராக இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அங்கே விடுமுறைக்கு சென்றுள்ள சோஃபியா அன்சாரி தனது ரெசார்ட்டின் பால்கனியில் வெறும் பிகினி உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

Sofia Ansari heroine glamour

பசங்களுக்கு ஜுரமே வந்துவிடும்: குளிரில் இப்படியொரு கவர்ச்சி உடையில் நின்றால் அவருக்கு ஜுரம் வருகிறதோ இல்லையோ இதை பார்த்தாலே பசங்களுக்கு ஜுரம் வந்துவிடும் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் பதிவிட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

குவியுது லைக்ஸ்: குளிர் உடையை போர்த்திக் கொண்டு பிரவுன் நிற பிகினி உடையில் கிளாமர் தூக்கலாக சோஃபியா அன்சாரி போஸ் கொடுத்து நிற்பதை பார்த்ததுமே ரசிகர்கள் ஹார்ட் பட்டனை அடித்து நொறுக்கி வருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் லைக்குகளை வெறும் 13 மணி நேரத்தில் அவரது 13 மில்லியன் ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X