முஸ்லீம்னா கோவிலுக்கு போகக் கூடாதா?: சீறும் நடிகை சோஹா அலி கான்
மும்பை: நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று தன்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த நெட்டிசன்கள் மீது பாய்ந்துள்ளார் பாலிவுட் நடிகை சோஹா அலி கான்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் தங்கையும், நடிகையுமான சோஹா அலி கான் கடந்த 3ம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வணங்கியுள்ளார். மேலும் கடந்த 9ம் தேதி அவர் விநாயகர் சதுர்த்தி பந்தலுக்கு சென்றும் வணங்கியுள்ளார்.

முஸ்லீமான சோஹா கோவிலுக்கு சென்றதை சமூக வலைதளங்களில் நெட்டின்சன்கள் கிண்டல் செய்தனர். இதை பார்த்த சோஹாவுக்கு கோபம் வந்துவிட்டது.
இது குறித்து சோஹா கூறுகையில்,
எனக்கு பிடித்ததை செய்யும் சுதந்திரம் உள்ளது. நான் கோவிலுக்கு சென்றதால் முஸ்லீம் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அதை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் நமாஸ் செய்தாலோ, தேவாலயத்திற்கு சென்றாலோ அது எப்படி பிறரை பாதிக்கும் என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











