ரொம்ப மோசம்... என் மேல கை வைக்கவே ஆர்வமாக வர்றாங்க... ஹீரோயின் அப்செட்

By

சென்னை: சில ரசிகர்கள் என் தோளில் கை வைக்க வருவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று நடிகை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சினிமா நடிகைகளை தேடி ரசிகர்கள் செல்வது வழக்கமானதுதான். அவர்களுடன் புகைப்படம், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. இதை நடிகர், நடிகைகளும் விரும்புவார்கள்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை கூறியிருக்கிறார் நடிகை நமிதா பிரமோத். இவர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். மலையாள நடிகையான இவர், இப்போது புரபொசர் தின்கன், அல் மல்லு படங்களில் நடித்துவருகிறார்.

தவறாக...

தவறாக...

பொது இடங்களில் தன்னைப் பார்த்தால் சில ரசிகர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சகோதரி

சகோதரி

அவர் கூறும்போது, சில இடங்களுக்குச் செல்லும்போது நான் தர்மசங்கடமாக உணர்கிறேன். சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்னைத் தங்கள் சகோதரியாகப் பாவித்து என்னுடன் பேசுகிறார்கள்.

கை வைக்கிறார்கள்

கை வைக்கிறார்கள்

புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிலர், ரசிகர்கள் என்ற போர்வையில் என் தோளில் கைவைக்கவே வருகிறார்கள். செல்ஃபி எடுப்பதாக என் உடலைத் தொடவே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

பர்தா அணிகிறேன்

பர்தா அணிகிறேன்

இது எனக்கு எரிச்சலை தருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது, பர்தா அணிந்துகொள்கிறேன். மக்கள் என்னை அடையாளம் கண்டு வந்து பேசுவதை வரவேற்கிறேன்.

அனுபவங்கள்

அவர்களுக்கு என்னைப் பிடித்திருப்பதால்தானே வருகிறார்கள். ஆனால், சில அனுபவங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்கிறார் நமிதா பிரமோத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X