சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு!
சென்னை: தன்னிடம் சிலர் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றதாக கூறி விஜய் பட நடிகை பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
நடிகை நித்யா மேனன் கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் நூற்றென்பது படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து விட்டார்.
காஞ்சனா 2 படத்தில் லாரன்ஸுடனும் மெர்சல் படத்தில் விஜயுடனும் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

தி அயன்லேடி
மிஷன் மங்கள் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் நடிகை நித்யா மேனன். தற்போது முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார்.

நித்யா மேனன்
இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நித்யா மேனன், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சினிமா துறை மட்டுமல்ல
தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனது பேட்டியில் தெரிவித்தார். அவர் பேசியதாவது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

தவறாக நடக்க முயன்றனர்
என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. ஆனால் சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று எச்சரித்தேன்.

துணிச்சல்தான்
என்ன தவறு நடந்தாலும் அதை துணிந்து எதிர்க்க வேண்டும். நாம் எதிர்த்தால்தான் மற்றவர்களும் பிரச்சனையில் தலையிடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பே அவர்களின் துணிச்சல்தான் என்று கூறினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் யார் என்பது குறித்து நித்யா மேனன் வாய்திறக்கவில்லை.
தனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக நடிகை நித்யாமேனன் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











