»   »  கிக் சோனா, பக் பக் ப்ரீத்தி!

கிக் சோனா, பக் பக் ப்ரீத்தி!

Subscribe to Oneindia Tamil

சொக்க வைக்கும் சோனாவும், பத்திக்க வைக்கும் ப்ரீத்தி வர்மாவும் இணைந்து கேள்விக்குறி படத்தில் தூள்கிளப்பி வருகிறார்கள். இந்த சுந்தர முந்திரிகளின் சுழலாட்டத்தை வியர்க்க விறுவிறுக்க படமாக்கி வருகிறார்கள்கேள்விக்குறி யூனிட்டார்.

இந்தப் புள்ளையாரும் பால் குடிப்பாரா என்பது போல ஒரு குழந்தைத்தனமான முகம் சோனாவுக்கு. ஆனால்படத்தில் அவர் காட்டியிருக்கும் கிளாமரைப் பார்த்தால், பெரிய பீர் பாலாக இருப்பார் போலத் தெரிகிறது.

படத்தின் பெயர் கேள்விக்குறி என்று இருந்தாலும், சோனாவின் போஸ்களைப் பார்த்தால் ஆச்சரியக் குறி அலைமோதுகிறது. முத்தா கொடுப்பதில் ஆகட்டும், கிக் ஏற்றுவதில் ஆகட்டும், அம்மணி அசத்தியுள்ளார்.

தட்டுத் தடுமாறாமல், பிசிறு இல்லாமல் அவர் காட்டியிருக்கும் தாராளமயமாக்கல், ரசிகர்களை திகட்ட திகட்டரசிக்க வைக்கும். சேலையில் சோலை போல ஜொலிக்கிறார். மாடர்ன் டிரஸ்ஸிலோ மனதுக்குள் புகுந்து மலைக்கவைக்கிறார்.

போஷாக்கான அழகுப் பொம்மையாக இருக்கும் சோனாவின் கிளாமருக்கு சற்றும் குறைவில்லாமல் ப்ரீத்தியும்கிளாமரில் பிளிறியுள்ளாராம். ஏற்கனவே சில படங்களில் குத்துப் பாட்டுக்கு கும்மாங்குத்தாட்டம் போட்டவர்ப்ரீத்தி.

எனவே அந்த அனுபவத்தின் பின்புலத்தை வைத்து இந்தப் படத்தின் கிளாமருக்கு பக்க பலம் சேர்த்துள்ளார்ப்ரீத்தி. சோனாவுக்கு சற்றும் சளைக்காமல் இவரும் சத்தாய்த்துள்ளார்.

படத்தில் பெரும்பாலும் டிராயர், பனியனில்தான் (அதுவும் முண்டா பனியன்!) வருகிறாராம். அப்பதான் வெட்டவெளிச்சமாக கிளாமரில் கலகலக்க முடியுமாம். பரவாயில்லை, பனியனிலும் பளபளப்பாகவே இருக்கிறார் ப்ரீத்தி.பனியனில் ப்ரீத்தியை பளிச்சிட வைப்பதற்காகவே வில்லனை விட்டு ப்ரீத்தியை வேட்டையாடுவது போலகாட்சியை வைத்துள்ளார்களாம்.

இப்படிப்பட்ட பரபரப்பான காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர்தான் பாவம்.கிளாமர் கங்காருகளிடம் சிக்கி படாத பாடு பட்டிருக்கிறார் இவர். அந்த அப்பாவியின் பெயர் ஜெய்லானி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil