வடிவேலுவுக்கு பயந்த கவர்ச்சி நடிகை சோனா.. பாதுகாப்புக்கு 12 பவுன்சர்களை அனுப்பிய விவிஐபி!

சென்னை: தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்கள் செய்து ஃபேமஸானவர் சோனா. காலப்போக்கில் அவருக்கு வாய்ப்புகள் போனதையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இப்போது அவர் தன் சுயசரிதையை படமாக எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.

விஜய் ஹீரோவாக நடித்த ஷாஜகான் படத்தில் செகண்ட் ஹீரோயின் நீங்கள்தான் என்று சொல்லி நடிக்க வைக்கப்பட்டவர் சோனா. ஆனால் அந்தப் படத்தில் அவருக்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனை அவரேகூட பின்நாட்களில் ஒரு பேட்டியில் சொல்லி வருத்தப்படவும் செய்தார். அந்தப் படத்துக்கு பிறகு பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களில் ஹோம்லி ரோல்கள்தான் செய்திருந்தார். ஆனால் அவருக்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை.

Sona Opens Up About Vadivelu Issue They Sent 12 Bouncers for My Safety
Photo Credit:

கிளாமர் ரோல்களுக்கு ஷிஃப்ட்: தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததாலும்; தெலுங்கில் மட்டும் கிடைத்த வாய்ப்புகளை தக்க வைக்க வேண்டும் என்பதாலும் கிளாமர் ரோல்களுக்கு ஷிஃப்ட் ஆனார். அந்தவகையில் தமிழில் அவர் மிருகம், பத்து பத்து, குசேலன், ஜித்தன் 2 உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களை ஏற்றிருந்தார். முன் இல்லாத அளவுக்கு இந்த முறை பலமான ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

Also Read
சேயோன் நிலைமை என்ன தெரியுமா?.. சிவகார்த்திகேயன் பரபரனு இருக்குறாரே ப்பா!
சேயோன் நிலைமை என்ன தெரியுமா?.. சிவகார்த்திகேயன் பரபரனு இருக்குறாரே ப்பா!

அதே ரூட்டில் பயணம்: அதன் பலனாக அவரும் பிஸியாக தொடர்ந்து அதே மாதிரியான ரோல்களில் நடித்தார். அப்படி அவர் வடிவேலுவுடன் குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது அவரால் தனக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வந்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். அதுமட்டுமின்றி மறைந்த பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டையும் வைத்தவர் என்பதும் நினைவிகூரத்தக்கது. மேலும் பிரேம்ஜியுடன் காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதில் உண்மையில்லை என விளக்கமும் கொடுத்துவிட்டார்.

ட்ரெண்டாகும் சோனா பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் சோனா. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தபோது வடிவேலுவுடன் ஒர்க் செய்ய வேண்டும் என்று எனக்கு ரொம்ப பெரிய ஆள் ரெக்கமெண்ட் செய்தார். பாதுகாப்பாக பார்த்துக்கொள்வோம், சிட்டிக்குள்தான் ஷூட்டிங் என்றெல்லாம் சொல்லித்தான் என்னை கமிட் செய்தார்கள்.

மகிழ்ச்சியோடு செய்தேன்: அந்தப் பட சமயத்தில்தான் பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் வந்துவிட்டன. அதில் கிளாமர் ரோல்கள்தான் செய்திருந்தேன். எனவே அதனை நான் என்ஜாய் செய்து செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதனால்தான் அந்தப் படத்தில் ரொம்ப கான்ஃபிடென்ஸாக செய்திருப்பேன். பிறகு ஒதுங்கிவிட்டேன். எனக்கு பெரிய ரெக்கமண்ட்டேஷன் வந்ததால்தான் வடிவேலுவுடன் மீண்டும் நடித்தேன். என்னை கமிட் செய்தவர்களிடம் ஏற்கனவே குசேலன் படத்தில் நடித்தபோது வடிவேலுவுடன் பிரச்னை ஏற்பட்டுவிட்டது என்று கூறினேன். அவர்கள் எனக்கு பாதுகாப்பாக 12 பவுன்சர்களை அனுப்பி வைத்தார்கள்" என்றார்.

வடிவேலு மீது குற்றச்சாட்டுக்கள்: முன்னதாக வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை நடிப்பில் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவருடன் பணியாற்றியவர்கள் எல்லாம் கடந்த சில வருடங்களாகவே வடிவேலு மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகிறார்கள். சோனாவும் ஏற்கனவே அவர் மீது கடுமையான குற்றச்சாட்டினை வைத்திருந்தார். அத்தனைக்கும் வடிவேலு தனது மௌனத்தையே பதிலாக கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X