ஹைய்யா மோகன்லாலுடன் நடிக்கிறேன்- குதூகலிக்கும் சோனா
தமிழில் ஓரிரு படங்களை மட்டுமே வைத்திருக்கும் சோனா, இப்போது பிற மொழியில் ஏதாவது தேறுமா என முயற்சித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தனது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான திரைக்கதையை உருவாக்கும் பணி நடக்கிறது. தனது கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சொந்த வாழ்க்கையை படமாக்க கூடாது என்று சோனாவுக்கு செல்போனில் மிரட்டல்களும் வந்தாலும் அவர் அசருவதாக இல்லையாம்.
இந்த நிலையில் மலையாளத்தில் 'கர்ம யோதா' என்ற படத்தில் நடிக்க சோனா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். மேஜர் ரவி இயக்குகிறார்.
மோகன்லால் கமாண்டோ வீரர் கேரக்டரில் வருகிறார். சோனாவுக்கு வில்லி வேடமாம்.
இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "மோகன்லால் ஒரு லெஜன்ட். அவரைப் போன்றவர்களுடன் நடிப்பதன் மூலம் என் நீண்ட நாள் கனவு நனவாகிவிட்டது," என்றார்.


Click it and Unblock the Notifications












