ரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்
மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது பிறந்தநாளான இன்று தனக்குத் தானே ஒரு பரிசை கொடுத்துக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரஜினியுடன் சேர்ந்து லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அவர் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் அவர் அளித்த பார்ட்டியில் இந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் அவருடைய காதலர் என்று கிசுகிசுக்கப்படும் நடிகர் ஷாஹித் கபூரை மட்டும் காணவில்லை.

அவர்கள் இருவரும் பார்ட்டி முடிந்த பிறகு இந்த நாளை கொண்டாட எங்கோ சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனாக்ஷி ட்விட்டரில் தனது பிறந்தநாள் பற்றி கூறியிருப்பதாவது,
சர்பிரைஸ்! இந்த டாட்டூ என் பிறந்தநாளுக்கு எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பரிசு. என்னை வழிநடத்தும் நட்சத்திரம். தற்போது என்னுடன் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications