'ரஜினியின் ஹீரோயினாக அறிமுகமாவதில் பெருமை...' - மேடையில் நடனமாடி மகிழ்ந்த சோனாக்ஷி

By Shankar

ரஜினியின் நாயகியாக தமிழில் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சோனாக்ஷி பேசுகையில், "ரஜினியின் நாயகியாக நான் தமிழில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது.

Sonakshi is proud to be Rajini's pair

இங்கே ரஜினி பெயரைச் சொல்லும்போது எழும் கைத்தட்டலும் உற்சாகமும் பிரமிப்பாக உள்ளது. அதை நான் ரொம்பவே ரசித்து அனுபவிக்கிறேன்.

எனக்கு தமிழ் தெரியாது. நான் பேசுவதற்கு நிச்சயம் கைத்தட்டல் கிடைக்காது. ஆனால் எனக்கு கைத்தட்டல் வரவழைப்பது எப்படி என்று தெரியும்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ஹீரோயின் (இப்படிச் சொன்ன அடுத்த நொடி சத்யம் கூரையைப் பிளக்கும் அளவு கைத்தட்டல், விசில்..)

இதுதான் எனக்குத் தெரிந்த டெக்னிக். ரஜினி சார் ஒரு லெஜன்ட். அவருடன் நடித்தது எனக்கு கனவு மாதிரிதான் இருக்கிறது. என்னை அவ்வளவு அன்புடன் பார்த்துக் கொண்டார். அந்த யூனிட்டே அப்படித்தான் கவனித்துக் கொண்டது," என்றார்.

பேசி முடித்ததும், ஆல் த ரஜினி பேன்ஸ்.. தலைவா... டோன்ட் மிஸ் த சான்ஸ் என்று அவர் மேடையில் லேசாக நடனம் ஆட, ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

பின்னர் ரஜினியிடம் சென்று ஆசி பெற்று அமர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X