இறுக்கிப் பிடித்த நடிகர்: காயம்பட்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா
மும்பை: தேவர் இந்தி படப்பிடிப்பில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரவுடியாக நடித்த நடிகரால் கையில் ரத்தம் கட்டிவிட்டது.
ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. அவர் இந்தியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தேவர் படத்தில் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தேவர் படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,
காட்சி ஒன்றில் ரவுடியாக நடிக்கும் நடிகர் ஒருவர் என் கையை மிகவும் இறுக்கமாக பிடித்தார். அவர் கை மிகவும் பெரியதாக வேறு இருந்தது. விளைவு என் கையில் ரத்தக்கட்டு என்றார்.
படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு காயம் ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications
