»   »  அவருக்கு ஓகே சொல்லவா, வேண்டாமா?: பெரிய்ய குழப்பத்தில் இருக்கும் லேடி ரஜினி

அவருக்கு ஓகே சொல்லவா, வேண்டாமா?: பெரிய்ய குழப்பத்தில் இருக்கும் லேடி ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷியை பார்த்து அவரது முன்னாள் காதலர் பன்ட்டி சச்தேவா கேட்டுள்ளாராம்.

சோனாக்ஷி சின்ஹாவுக்கு 28 வயது ஆனாலும் அவர் பாலிவுட்டில் 40களில் இருக்கும் ஹீரோக்களுக்கு தான் பெரும்பாலும் ஜோடியாக நடித்து வருகிறார். கோலிவுட் வந்தவர் தனது தந்தையின் நண்பரான ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார்.

சோனாக்ஷி என்றாலே சீனியர்களின் ஹீரோயின் என்றாகிவிட்டது.

காதல்

காதல்

சோனாக்ஷி கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனது மேனேஜர் பன்ட்டி சச்தேவாவை காதலித்தார். சல்மான் கானின் தம்பி சொஹைல் கானின் மைத்துனரான சச்தேவா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்.

காதல் முறிவு

காதல் முறிவு

சோனாக்ஷி, சச்தேவாவின் காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது. முன்னதாக சச்தேவா நடிகைகள் சுஷ்மிதா சென், நேஹா தூபியா ஆகியோரையும் காதலித்துள்ளார். சோனாக்ஷியின் பெயர் நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அர்ஜுன் கபூர் ஆகியோருடன் சேர்ந்து அடிபட்டது.

மீண்டும்

மீண்டும்

சோனாக்ஷியுடனான காதலை புதுப்பிக்க நினைக்கிறார் சச்தேவா. அண்மையில் இருவரும் ஜோடி போட்டு சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சச்தேவா சோனாவிடம் தெரிவித்துள்ளாராம்.

குழப்பம்

குழப்பம்

சச்தேவாவுக்கு ஓகே சொல்லி திருமணம் செய்வதா இல்லை படங்களில் மட்டும் கவனம் செலுத்துவதா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் சோனாக்ஷி.

English summary
Well, rumours are rife that the 'Dabanng Girl' of Bollywood, who had once dated celebrity manager, Bunty Sachdeva gets marriage proposal from him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil