»   »  லிங்காவுக்குப் பிறகு சோனாக்ஷிக்கு குவியும் பாராட்டுகள்.. வாய்ப்புகள்!

லிங்காவுக்குப் பிறகு சோனாக்ஷிக்கு குவியும் பாராட்டுகள்.. வாய்ப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ல சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுரகளும் வாய்ப்புகளும் குவிகின்றன.

புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

sonakshi sinha

லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. இந்திப் படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம்.

அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட சோனாக்ஷிக்கு ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தன.

இப்போது அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. தனது அடுத்த படமும் லிங்கா மாதிரி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதால், கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார் சோனாக்ஷி.

English summary
Bollywood diva Sonakshi Sinha who has given back to back super hits in B-town marked her Tamil debut opposite superstar Rajnikant in ‘Lingaa'. We hear that the audiences are loving Sonakshi's performance in the film and are all praise for her.
Please Wait while comments are loading...